Corpus pasurams 3923–3932

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 31 · corpus 3923

Pasuram 31

Study resources at Uveda
ஆண்டுகள் நாள் திங்கள் ஆய் * நிகழ் காலம் எல்லாம் மனமே
 ஈண்டு * பல் யோனிகள்தோறு உழல்வோம் ** இன்று ஓர் எண் இன்றியே
 காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணைக்கீழ்ப் *
 பூண்ட அன்பாளன் * இராமாநுசனைப் பொருந்தினமே (31)

Pasuram 32 · corpus 3924

Pasuram 32

Study resources at Uveda
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
 திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் ** செறு கலியால்
 வருந்திய ஞாலத்தை * வண்மையினால் வந்து எடுத்து அளித்த
 அருந் தவன் * எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே (32) *

Pasuram 33 · corpus 3925

Pasuram 33

Study resources at Uveda
அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் * கை ஆழி என்னும்
 படையோடு நாந்தகமும் படர் தண்டும் ** ஒண் சார்ங்க வில்லும்
 புடை ஆர் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு * என்று
 இடையே * இராமாநுசமுனி ஆயின இந் நிலத்தே (33)

Pasuram 34 · corpus 3926

Pasuram 34

Study resources at Uveda
நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை * நினைப்பு அரிய
 பலத்தைச் செறுத்தும் பிறங்கியது இல்லை ** என் பெய் வினை தென்
 புலத்தில் பொறித்த அப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின் *
 நலத்தைப் பொறுத்தது * இராமாநுசன் தன் நயப் புகழே (34)

Pasuram 35 · corpus 3927

Pasuram 35

Study resources at Uveda
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே * சில மானிடத்தைப்
 புயலே எனக் கவி போற்றி செய்யேன் ** பொன் அரங்கம் என்னில்
 மயலே பெருகும் இராமாநுசன் * மன்னு மா மலர்த்தாள்
 அயரேன் * அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே? (35)

Pasuram 36 · corpus 3928

Pasuram 36

Study resources at Uveda
அடல் கொண்ட நேமியன் ஆர் உயிர் நாதன் * அன்று ஆரணச் சொல்
 கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு ** அளிப்ப பின்னும் காசினியோர்
 இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ் ஒண்பொருள் கொண்டு * அவர் பின்
 படரும் குணன் * எம் இராமாநுசன் தன் படி இதுவே (36)

Pasuram 37 · corpus 3929

Pasuram 37

Study resources at Uveda
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம் *
 குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் ** அன்பர்
 கடி கொண்ட மா மலர்த் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் *
 அடி கண்டு கொண்டு உகந்து * என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே (37)

Pasuram 38 · corpus 3930

Pasuram 38

Study resources at Uveda
ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று * அவமே
 போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு? ** புண்ணியர் தம்
 வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் *
 நோக்கில் தெரிவு அரிதால் * உரையாய் இந்த நுண் பொருளே (38)

Pasuram 39 · corpus 3931

Pasuram 39

Study resources at Uveda
பொருளும் புதல்வரும் பூமியும் * பூங்குழலாரும் என்றே
 மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே ** மற்று உளார் தரமோ
 இருள் கொண்ட வெம் துயர் மாற்றித் தன் ஈறு இல் பெரும் புகழே *
 தெருளும் தெருள் தந்து * இராமாநுசன் செய்யும் சேமங்களே? (39)

Pasuram 40 · corpus 3932

Pasuram 40

Study resources at Uveda
சேம நல் வீடும் பொருளும் தருமமும் * சீரிய நல்
 காமமும் என்று இவை நான்கு என்பர் ** நான்கினும் கண்ணனுக்கே
 ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் *
 வாமனன் சீலன் * இராமாநுசன் இந்த மண்மிசையே (40)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.