Corpus pasurams 3933–3942

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 41 · corpus 3933

Pasuram 41

Study resources at Uveda
மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
 கண் உற நிற்கிலும் காணகில்லா ** உலகோர்கள் எல்லாம்
 அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப் பொழுதே *
 நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு * நாரணற்கு ஆயினரே (41)

Pasuram 42 · corpus 3934

Pasuram 42

Study resources at Uveda
ஆயிழையார் கொங்கை தங்கும் * அக் காதல் அளற்று அழுந்தி
 மாயும் என் ஆவியை * வந்து எடுத்தான் இன்று ** மா மலராள்
 நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் * அரங்கன் என்னும்
 தூயவன் * தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே (42)

Pasuram 43 · corpus 3935

Pasuram 43

Study resources at Uveda
சுரக்கும் திருவும் உணர்வும் * சொலப்புகில் வாய் அமுதம்
 பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் ** படியில் உள்ளீர்
 உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத் *
 துரக்கும் பெருமை * இராமாநுசன் என்று சொல்லுமினே (43)

Pasuram 44 · corpus 3936

Pasuram 44

Study resources at Uveda
சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் * சுருதிகள் நான்கும் எல்லை
 இல்லா * அறநெறி யாவும் தெரிந்தவன் ** எண் அரும் சீர்
 நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பிக் *
 கல்லார் அகல் இடத்தோர் * எது பேறு என்று காமிப்பரே (44)

Pasuram 45 · corpus 3937

Pasuram 45

Study resources at Uveda
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி * அப் பேறு அளித்தற்கு
 ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி ** என்று இப் பொருளைத்
 தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால் *
 கூறும் பரம் அன்று * இராமாநுச மெய்ம்மை கூறிடிலே (45)

Pasuram 46 · corpus 3938

Pasuram 46

Study resources at Uveda
கூறும் சமயங்கள் ஆறும் குலைய * குவலயத்தே
 மாறன் பணித்த மறை உணர்ந்தோனை ** மதியிலியேன்
 தேறும்படி என் மனம் புகுந்தானைத் * திசை அனைத்தும்
 ஏறும் குணனை * இராமாநுசனை இறைஞ்சினமே (46)

Pasuram 47 · corpus 3939

Pasuram 47

Study resources at Uveda
இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று * இவ் உலகத்து
 அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் ** என் அருவினையின்
 திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே
 நிறைந்து ஒப்பு அற இருந்தான் * எனக்கு ஆரும் நிகர் இல்லையே (47)

Pasuram 48 · corpus 3940

Pasuram 48

Study resources at Uveda
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு * உன் அருளின்கண் அன்றிப்
 புகல் ஒன்றும் இல்லை * அருட்கும் அஃதே புகல் ** புன்மையிலோர்
 பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே *
 அகலும் பொருள் என் * பயன் இருவோமுக்கும் ஆன பின்னே? (48)

Pasuram 49 · corpus 3941

Pasuram 49

Study resources at Uveda
ஆனது செம்மை அறநெறி * பொய்ம்மை அறு சமயம்
 போனது பொன்றி * இறந்தது வெம் கலி ** பூங் கமலத்
 தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத் *
 தான் அதில் மன்னும் * இராமாநுசன் இத் தலத்து உதித்தே (49)

Pasuram 50 · corpus 3942

Pasuram 50

Study resources at Uveda
உதிப்பன உத்தமர் சிந்தையுள் * ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக்
 கொதித்திட * மாறி நடப்பன ** கொள்ளை வன் குற்றம் எல்லாம்
 பதித்த என் புன் கவிப் பா இனம் பூண்டன பாவு தொல் சீர் *
 எதித் தலை நாதன் * இராமாநுசன் தன் இணை அடியே (50)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.