Corpus pasurams 3943–3952

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 51 · corpus 3943

Pasuram 51

Study resources at Uveda
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் * அன்று பாரதப் போர்
 முடியப் * பரி நெடுந் தேர் விடும் கோனை ** முழுது உணர்ந்த
 அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து * இப்
 படியில் பிறந்தது * மற்று இல்லை காரணம் பார்த்திடிலே (51)

Pasuram 52 · corpus 3944

Pasuram 52

Study resources at Uveda
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப * இப் பார் முழுதும்
 போர்த்தான் புகழ்கொண்டு * புன்மையினேனிடைத் தான் புகுந்து **
 தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய * தாள் இணையோடு
 ஆர்த்தான் * இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே (52)

Pasuram 53 · corpus 3945

Pasuram 53

Study resources at Uveda
அற்புதன் செம்மை இராமாநுசன் * என்னை ஆள வந்த
 கற்பகம் கற்றவர் * காமுறு சீலன் ** கருது அரிய
 பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும் *
 நற்பொருள் தன்னை * இந் நானிலத்தே வந்து நாட்டினனே (53)

Pasuram 54 · corpus 3946

Pasuram 54

Study resources at Uveda
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன * நாரணனைக்
 காட்டிய வேதம் களிப்புற்றது ** தென் குருகை வள்ளல்
 வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது * மண்ணுலகில்
 ஈட்டிய சீலத்து * இராமாநுசன் தன் இயல்வு கண்டே (54)

Pasuram 55 · corpus 3947

Pasuram 55

Study resources at Uveda
கண்டவர் சிந்தை கவரும் * கடி பொழில் தென் அரங்கன் *
 தொண்டர் குலாவும் இராமாநுசனை ** தொகை இறந்த
 பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் *
 கொண்டலை மேவித்தொழும் * குடி ஆம் எங்கள் கோக்குடியே (55)

Pasuram 56 · corpus 3948

Pasuram 56

Study resources at Uveda
கோக் குல மன்னரை மூவெழு கால் * ஒரு கூர் மழுவால்
 போக்கிய தேவனைப் * போற்றும் புனிதன் ** புவனம் எங்கும்
 ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் * என்
 வாக்கு உரையாது * என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே (56)

Pasuram 57 · corpus 3949

Pasuram 57

Study resources at Uveda
மற்று ஒரு பேறு மதியாது * அரங்கன் மலர் அடிக்கு ஆள்
 உற்றவரே * தனக்கு உற்றவராக் கொள்ளும் உத்தமனை **
 நல் தவர் போற்றும் இராமாநுசனை * இந் நானிலத்தே
 பெற்றனன் * பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதைமையே (57)

Pasuram 58 · corpus 3950

Pasuram 58

Study resources at Uveda
பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி * பிரமம் நன்று என்று
 ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று ** உயிர்கள் மெய்விட்டு
 ஆதிப் பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம் *
 வாதில் வென்றான் * எம் இராமாநுசன் மெய்ம் மதிக்கடலே (58)

Pasuram 59 · corpus 3951

Pasuram 59

Study resources at Uveda
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் * கலி இருளே
 மிடைதரு காலத்து இராமாநுசன் ** மிக்க நான்மறையின்
 சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் * உயிரை
 உடையவன் * நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே (59)

Pasuram 60 · corpus 3952

Pasuram 60

Study resources at Uveda
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்தொறும் * திருவாய்மொழியின்
 மணம் தரும் * இன் இசை மன்னும் இடம்தொறும் ** மா மலராள்
 புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்
 குணம் திகழ் கொண்டல் * இராமாநுசன் எம் குலக் கொழுந்தே (60)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.