Thiruvarangathu Amudanar · Reading part · pasurams 61–70
Ramanusa Noorandhadhi Pasurams 61–70
10pasurams
Corpus pasurams 3953–3962
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி * இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமாநுசன் ** மன்னு மா மலர்த் தாள்
பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் *
பெருந் தேவரைப்பரவும் * பெரியோர் தம் கழல் பிடித்தே (62)
பிடியைத் தொடரும் களிறு என்ன * யான் உன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் ** அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து * இப்
படியைத் தொடரும் * இராமாநுச மிக்க பண்டிதனே (63)
பண் தரு மாறன் பசுந் தமிழ் ** ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமாநுசமுனி வேழம் ** மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்டம் ஏந்திக் * குவலயத்தே
மண்டி வந்து ஏன்றது * வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே (64)
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு * என்றும் மறையவர் தம்
தாழ்வு அற்றது * தவம் தாரணி பெற்றது ** தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு * அந்
நாழ் அற்றது * நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே (65)
ஞானம் கனிந்த நலம் கொண்டு * நாள்தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் ** வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு * அத்
தானம் கொடுப்பது * தன் தகவு என்னும் சரண் கொடுத்தே (66)
சரணம் அடைந்த தருமனுக்காப் * பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை ** வணங்க வைத்த
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் * உயிர்கட்கு
அரண் அங்கு அமைத்திலனேல் * அரண் ஆர் மற்று இவ் ஆர் உயிர்க்கே? (67)
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில்? * மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் ** செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமாநுசனைப் பணியும் நல்லோர் *
சீரினில் சென்று பணிந்தது * என் ஆவியும் சிந்தையுமே (68)
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன் நாள்
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு ** அவை என் தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் * தான் அது தந்து
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே (69)
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து * எண் இல் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் * அருள் செய்வதே நலம் ** அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை *
தன்னை என் பார்ப்பர் * இராமாநுச உன்னைச் சார்ந்தவரே? (70)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.