Thiruvarangathu Amudanar · Reading part · pasurams 71–80
Ramanusa Noorandhadhi Pasurams 71–80
10pasurams
Corpus pasurams 3963–3972
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் * அன்பு தான் மிகவும்
கூர்ந்தது * அத் தாமரைத் தாள்களுக்கு ** உன் தன் குணங்களுக்கே
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை * அதனால்
பேர்ந்தது * வண்மை இராமாநுச எம் பெருந்தகையே (71)
கைத்தனன் தீய சமயக் கலகரை * காசினிக்கே
உய்த்தனன் * தூய மறைநெறி தன்னை ** என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை * இராமாநுசன் மிக்க வண்மை செய்தே (72)
வண்மையினாலும் தன் மா தகவாலும் * மதி புரையும்
தண்மையினாலும் இத் தாரணியோர்கட்கு ** தான் சரணாய்
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை * உன்னும்
திண்மை அல்லால் எனக்கு இல்லை * மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே (73)
தேரார் மறையின் திறம் என்று * மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது ** கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் * அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது * அப்போது ஒரு சிந்தைசெய்தே (74)
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் * நிறை வேங்கடப் பொன்
குன்றமும் * வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் **
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணைமலர்த் தாள் *
என் தனக்கும் அது * இராமாநுச இவை ஈய்ந்து அருளே (76)
ஈய்ந்தனன் ஈயாத இன்னருள் * எண் இல் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் * அம் மறைப் பல் பொருளால் ** இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை * வேர் பறியக்
காய்ந்தனன் * வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே? (77)
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி * கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து ** நீ இந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் * என் நெஞ்சில்
பொருத்தப்படாது * எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே (78)