Pasuram 91 · corpus 842
Pasuram 91
பண் உலாவு மென் மொழிப் * படைத் தடங்கணாள் பொருட்டு *
எண் இலா அரக்கரை * நெருப்பினால் நெருக்கினாய் **
கண் அலால் ஒர் கண் இலேன் * கலந்த சுற்றம் மற்று இலேன் *
எண் இலாத மாய நின்னை * என்னுள் நீக்கல் என்றுமே (91)
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 91–100
Corpus pasurams 842–851
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 91 · corpus 842
பண் உலாவு மென் மொழிப் * படைத் தடங்கணாள் பொருட்டு *
எண் இலா அரக்கரை * நெருப்பினால் நெருக்கினாய் **
கண் அலால் ஒர் கண் இலேன் * கலந்த சுற்றம் மற்று இலேன் *
எண் இலாத மாய நின்னை * என்னுள் நீக்கல் என்றுமே (91)
Pasuram 92 · corpus 843
விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து * வென்றி வேற்கண் மாதரார் *
கடிக் கலந்த தோள் புணர்ந்த * காலி ஆய வேலை நீர் **
படைத்து அடைத்து அதில் கிடந்து * முன் கடைந்த நின்தனக்கு *
அடைக்கலம் புகுந்த என்னை * அஞ்சல் என்ன வேண்டுமே (92)
Pasuram 93 · corpus 844
சுரும்பு அரங்கு தண் துழாய் * துதைந்து அலர்ந்த பாதமே *
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு * இரங்கு அரங்கவாணனே **
கரும்பு இருந்த கட்டியே * கடல் கிடந்த கண்ணனே *
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த * வில் இராமனே (93)
Pasuram 94 · corpus 845
ஊனில் மேய ஆவி நீ * உறக்கமோடு உணர்ச்சி நீ *
ஆனில் மேய ஐந்தும் நீ * அவற்றுள் நின்ற தூய்மை நீ **
வானினோடு மண்ணும் நீ * வளங் கடல் பயனும் நீ *
யானும் நீ அது அன்றி * எம்பிரானும் நீ இராமனே (94)
Pasuram 95 · corpus 846
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி * ஆசையாம் அவை *
தொடக்கு அறுத்து வந்து * நின் தொழிற்கண் நின்ற என்னை நீ **
விடக் கருதி மெய்செயாது * மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும் *
கடல் கிடந்த நின் அலால் * ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே (95)
Pasuram 96 · corpus 847
வரம்பு இலாத மாய மாய * வையம் ஏழும் மெய்ம்மையே *
வரம்பு இல் ஊழி ஏத்திலும் * வரம்பு இலாத கீர்த்தியாய் **
வரம்பு இலாத பல் பிறப்பு * அறுத்து வந்து நின்கழல் *
பொந்துமா திருந்த நீ * வரம் செய் புண்டரீகனே (96)
Pasuram 97 · corpus 848
வெய்ய ஆழி சங்கு தண்டு * வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய * செய்ய போதில் மாது * சேரும் மார்ப நாதனே **
ஐயில் ஆய ஆக்கை நோய் * அறுத்து வந்து நின் அடைந்து *
உய்வது ஓர் உபாயம் நீ * எனக்கு நல்க வேண்டுமே (97)
Pasuram 98 · corpus 849
மறம் துறந்து வஞ்சம் மாற்றி * ஐம்புலன்கள் ஆசையும்
துறந்து * நின்கண் ஆசையே * தொடர்ந்து நின்ற நாயினேன் **
பிறந்து இறந்து பேர் இடர்ச் * சுழிக்கணின்று நீங்குமா *
மறந்திடாது மற்று எனக்கு * மாய நல்க வேண்டுமே (98)
Pasuram 99 · corpus 850
காட்டி நான் செய் வல்வினை * பயன்தனால் மனந்தனை *
நாட்டி வைத்து நல்ல அல்ல * செய்ய எண்ணினார் என **
கேட்டது அன்றி என்னது ஆவி * பின்னை கேள்வ நின்னொடும் *
பூட்டி வைத்த என்னை * நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே (99)
Pasuram 100 · corpus 851
பிறப்பினோடு பேர் இடர்ச் * சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது *
இறப்ப வைத்த ஞான நீசரைக் * கரைக்கொடு ஏற்றுமா **
பெறற்கு அரிய நின்ன பாத * பத்தி ஆன பாசனம் *
பெறற்கு அரிய மாயனே * எனக்கு நல்க வேண்டுமே (100)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.