Corpus pasurams 832–841

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 81 · corpus 832

Pasuram 81

Study resources at Uveda
கடைந்த பாற்கடல் கிடந்து * காலநேமியைக் கடிந்து *
 உடைந்த வாலி தன் தனக்கு * உதவ வந்து இராமனாய் **
 மிடைந்த ஏழ் மரங்களும் * அடங்க எய்து வேங்கடம் *
 அடைந்த மால பாதமே * அடைந்து நாளும் உய்ம்மினோ (81)

Pasuram 82 · corpus 833

Pasuram 82

Study resources at Uveda
எத்திறத்தும் ஒத்து நின்று * உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் *
 முத்திறத்து மூரி நீர் * அராவணைத் துயின்ற ** நின்
 பத்து உறுத்த சிந்தையோடு * நின்று பாசம் விட்டவர்க்கு *
 எத்திறத்தும் இன்பம் * இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே (82)

Pasuram 83 · corpus 834

Pasuram 83

Study resources at Uveda
மட்டு உலாவு தண் துழாய் * அலங்கலாய் புலன் கழல் *
 விட்டு வீழ்வு இலாத போகம் * விண்ணில் நண்ணி ஏறினும் **
 எட்டினோடு இரண்டு எனும் * கயிற்றினால் மனந்தனைக்
 கட்டி * வீடு இலாது வைத்த காதல் * இன்பம் ஆகுமே (83)

Pasuram 84 · corpus 835

Pasuram 84

Study resources at Uveda
பின் பிறக்க வைத்தனன் கொல்? * அன்றி நின்று தன் கழற்கு *
 அன்பு உறைக்க வைத்த நாள் * அறிந்தனன் கொல் ஆழியான்? **
 தன் திறத்து ஒர் அன்பிலா * அறிவு இலாத நாயினேன் *
 என் திறத்தில் என்கொல் * எம்பிரான் குறிப்பில் வைத்ததே? (84)

Pasuram 85 · corpus 836

Pasuram 85

Study resources at Uveda
நச்சு அராவணைக் கிடந்த * நாத பாத போதினில் *
 வைத்த சிந்தை வாங்குவித்து * நீங்குவிக்க நீ இனம் **
 மெய்த்தன் வல்லை ஆதலால் * அறிந்தனன் நின் மாயமே *
 உய்த்து நின் மயக்கினில் * மயக்கல் என்னை மாயனே (85)

Pasuram 86 · corpus 837

Pasuram 86

Study resources at Uveda
சாடு சாடு பாதனே * சலம் கலந்த பொய்கைவாய் *
 ஆடு அராவின் வன்பிடர் * நடம் பயின்ற நாதனே **
 கோடு நீடு கைய செய்ய * பாதம் நாளும் உள்ளினால் *
 வீடனாக மெய் செயாத * வண்ணம் என்கொல்? கண்ணனே (86)

Pasuram 87 · corpus 838

Pasuram 87

Study resources at Uveda
நெற்றி பெற்ற கண்ணன் * விண்ணின் நாதனோடு போதின்மேல் *
 நற்றவத்து நாதனோடு * மற்றும் உள்ள வானவர் **
 கற்ற பெற்றியால் வணங்கு * பாத நாத வேத * நின்
 பற்று அலால் ஒர் பற்று * மற்றது உற்றிலேன் உரைக்கிலே (87)

Pasuram 88 · corpus 839

Pasuram 88

Study resources at Uveda
வெள்ளை வேலை வெற்பு நாட்டி * வெள் எயிற்று அராவு அளாய் *
 அள்ளலாக் கடைந்த அன்று * அருவரைக்கு ஓர் ஆமையாய் **
 உள்ள நோய்கள் தீர் மருந்து * வானவர்க்கு அளித்த * எம்
 வள்ளலாரை அன்றி * மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே? (88)

Pasuram 89 · corpus 840

Pasuram 89

Study resources at Uveda
பார் மிகுத்த பாரம் முன் * ஒழிச்சுவான் அருச்சுனன் *
 தேர் மிகுத்து மாயம் ஆக்கி * நின்று கொன்று வென்றிசேர் **
 மாரதர்க்கு வான் கொடுத்து * வையம் ஐவர் பாலதாம் *
 சீர் மிகுத்த நின் அலால் ஒர் * தெய்வம் நான் மதிப்பனே? (89)

Pasuram 90 · corpus 841

Pasuram 90

Study resources at Uveda
குலங்களாய ஈரிரண்டில் * ஒன்றிலும் பிறந்திலேன் *
 நலங்களாய நற்கலைகள் * நாலிலும் நவின்றிலேன் **
 புலன்கள் ஐந்தும் வென்றிலேன் * பொறியிலேன் புனித * நின்
 இலங்கு பாதம் அன்றி * மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே (90)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.