Pasuram 21 · corpus 772
Pasuram 21
அரங்கனே! தரங்க நீர் * கலங்க அன்று குன்று சூழ் *
மரங்கள் தேய மாநிலம் குலுங்க * மாசுணம் சுலாய் **
நெருங்க நீ கடைந்த போது * நின்ற சூரர் என் செய்தார்? *
குரங்கை ஆள் உகந்த எந்தை! * கூறு தேற வேறு இதே (21)
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 21–30
Corpus pasurams 772–781
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 21 · corpus 772
அரங்கனே! தரங்க நீர் * கலங்க அன்று குன்று சூழ் *
மரங்கள் தேய மாநிலம் குலுங்க * மாசுணம் சுலாய் **
நெருங்க நீ கடைந்த போது * நின்ற சூரர் என் செய்தார்? *
குரங்கை ஆள் உகந்த எந்தை! * கூறு தேற வேறு இதே (21)
Pasuram 22 · corpus 773
பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் * பாலனாகி ஞாலம் ஏழ் *
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற * ஆதிதேவனே **
வண்டு கிண்டு தண் துழாய் * அலங்கலாய் கலந்த சீர் *
புண்டரீகப் பாவை சேரும் மார்ப * பூமிநாதனே (22)
Pasuram 23 · corpus 774
வால் நிறத்து ஒர் சீயமாய் * வளைந்த வாள் எயிற்றவன் *
ஊன் நிறத்து உகிர்த்தலம் * அழுத்தினாய் உலாய சீர் **
நால் நிறத்த வேத நாவர் * நல்ல யோகினால் வணங்கு *
பால் நிறக் கடல் கிடந்த * பற்பநாபன் அல்லையே? (23)
Pasuram 24 · corpus 775
கங்கை நீர் பயந்த பாத * பங்கயத்து எம் அண்ணலே *
அங்கை ஆழி சங்கு தண்டு * வில்லும் வாளும் ஏந்தினாய் **
சிங்கமாய தேவதேவ * தேன் உலாவு மென் மலர் *
மங்கை மன்னி வாழும் மார்ப * ஆழி மேனி மாயனே (24)
Pasuram 25 · corpus 776
வரத்தினில் சிரத்தை மிக்க * வாள் எயிற்று மற்றவன் *
உரத்தினில் கரத்தை வைத்து * உகிர்த்தலத்தை ஊன்றினாய் **
இரத்தி நீ இது என்ன பொய்? * இரந்த மண் வயிற்றுளே
கரத்தி * உன் கருத்தை யாவர் காண வல்லர்? * கண்ணனே (25)
Pasuram 26 · corpus 777
ஆணினோடு பெண்ணும் ஆகி * அல்லவோடு நல்லவாய் *
ஊணொடு ஓசை ஊறும் ஆகி * ஒன்று அலாத மாயையாய் **
பூணி பேணும் ஆயன் ஆகி * பொய்யினோடு மெய்யுமாய் *
காணி பேணும் மாணியாய்க் * கரந்து சென்ற கள்வனே (26)
Pasuram 27 · corpus 778
விண் கடந்த சோதியாய் * விளங்கு ஞான மூர்த்தியாய் *
பண் கடந்த தேசம் மேவு * பாவநாச நாதனே **
எண் கடந்த யோகினோடு * இரந்து சென்று மாணியாய் *
மண் கடந்த வண்ணம் நின்னை * யார் மதிக்க வல்லரே? (27)
Pasuram 28 · corpus 779
படைத்த பார் இடந்து அளந்து * அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் *
படைத்து அடைத்து அதில் கிடந்து * முன் கடைந்த பெற்றியோய் **
மிடைத்த மாலி மாலிமான் * விலங்கு காலன் ஊர் புக *
படைக்கலம் விடுத்த * பல் படைத் தடக்கை மாயனே (28) *
Pasuram 29 · corpus 780
பரத்திலும் பரத்தை ஆதி * பௌவ நீர் அணைக் கிடந்து *
உரத்திலும் ஒருத்தி தன்னை * வைத்து உகந்து அது அன்றியும் **
நரத்திலும் பிறத்தி * நாத ஞான மூர்த்தி ஆயினாய் *
ஒருத்தரும் நினாது தன்மை * இன்னது என்ன வல்லரே? (29)
Pasuram 30 · corpus 781
வானகமும் மண்ணகம்மும் * வெற்பும் ஏழ் கடல்களும் *
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற * புண்டரீகனே **
தேன் அகஞ்செய் தண் நறும் * மலர்த் துழாய் நன் மாலையாய் *
கூன் அகம் புகத் தெறித்த * கொற்ற வில்லி அல்லையே? (30)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.