Corpus pasurams 782–791

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 31 · corpus 782

Pasuram 31

Study resources at Uveda
காலநேமி காலனே * கணக்கு இலாத கீர்த்தியாய் *
 ஞாலம் ஏழும் உண்டு * பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே **
 வேலை வேவ வில் வளைத்த * வெல் சினத்த வீர * நின்
 பாலர் ஆய பத்தர் சித்தம் * முத்தி செய்யும் மூர்த்தியே (31)

Pasuram 32 · corpus 783

Pasuram 32

Study resources at Uveda
குரக்கினப் படை கொடு * குரை கடலின் மீது போய்
 அரக்கர் அங்கு அரங்க * வெஞ்சரம் துரந்த ஆதி நீ **
 இரக்க மண் கொடுத்தவற்கு * இரக்கம் ஒன்றும் இன்றியே *
 பரக்க வைத்து அளந்து கொண்ட * பற்பபாதன் அல்லையே? (32)

Pasuram 33 · corpus 784

Pasuram 33

Study resources at Uveda
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ * வெஞ்சரம் துரந்து *
 பின்னவற்கு அருள் புரிந்து * அரசு அளித்த பெற்றியோய் **
 நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை * பின்னை கேள்வ மன்னு சீர் *
 பொன் நிறத்த வண்ணன் ஆய * புண்டரீகன் அல்லையே? (33)

Pasuram 34 · corpus 785

Pasuram 34

Study resources at Uveda
ஆதி ஆதி ஆதி நீ * ஒர் அண்டம் ஆதி ஆதலால் *
 சோதியாத சோதி நீ * அது உண்மையில் விளங்கினாய் **
 வேதம் ஆகி வேள்வி ஆகி * விண்ணினோடு மண்ணுமாய் *
 ஆதி ஆகி ஆயன் ஆய * மாயம் என்ன மாயமே? (34)

Pasuram 35 · corpus 786

Pasuram 35

Study resources at Uveda
அம்பு உலாவு மீனும் ஆகி * ஆமை ஆகி ஆழியார் *
 தம்பிரானும் ஆகி மிக்கது * அன்பு மிக்கு அது அன்றியும் **
 கொம்பு அராவு நுண்மருங்குல் * ஆயர் மாதர் பிள்ளையாய் *
 எம்பிரானும் ஆய வண்ணம் * என்கொலோ? எம் ஈசனே (35)

Pasuram 36 · corpus 787

Pasuram 36

Study resources at Uveda
ஆடகத்த பூண் முலை * யசோதை ஆய்ச்சி பிள்ளையாய் *
 சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி * கள்ள தாய பேய்மகள் **
 வீட வைத்த வெய்ய கொங்கை * ஐய பால் அமுது செய்து *
 ஆடகக் கை மாதர் வாய் * அமுதம் உண்டது என் கொலோ? (36)

Pasuram 37 · corpus 788

Pasuram 37

Study resources at Uveda
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து * எதிர்ந்த பூங் குருந்தம்
 சாய்த்து * மா பிளந்த கைத் தலத்த * கண்ணன் என்பரால் **
 ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு * வெண்ணெய் உண்டு * பின்
 பேய்ச்சி பாலை உண்டு பண்டு * ஓர் ஏனம் ஆய வாமனா (37)

Pasuram 38 · corpus 789

Pasuram 38

Study resources at Uveda
கடம் கலந்த வன் கரி * மருப்பு ஒசித்து ஒர் பொய்கை வாய் *
 விடம் கலந்த பாம்பின் மேல் * நடம் பயின்ற நாதனே **
 குடம் கலந்த கூத்தன் ஆய * கொண்டல் வண்ண தண்துழாய் *
 வடம் கலந்த மாலை மார்ப * காலநேமி காலனே (38)

Pasuram 39 · corpus 790

Pasuram 39

Study resources at Uveda
வெற்பு எடுத்து வேலை நீர் * கலக்கினாய் அது அன்றியும் *
 வெற்பு எடுத்து வேலை நீர் * வரம்பு கட்டி வேலை சூழ் **
 வெற்பு எடுத்த இஞ்சி சூழ் * இலங்கை கட்டழித்த நீ *
 வெற்பு எடுத்து மாரி காத்த * மேகவண்ணன் அல்லையே? (39)

Pasuram 40 · corpus 791

Pasuram 40

Study resources at Uveda
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று * அது அன்றி ஆயர் பிள்ளையாய் *
 ஆனை மேய்த்தி ஆனெய் உண்டி * அன்று குன்றம் ஒன்றினால் **
 ஆனை காத்து மை அரிக் கண் * மாதரார் திறத்து முன் *
 ஆனை அன்று சென்று அடர்த்த * மாயம் என்ன மாயமே (40)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.