Corpus pasurams 792–801

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 41 · corpus 792

Pasuram 41

Study resources at Uveda
ஆயன் ஆகி ஆயர் மங்கை * வேய தோள் விரும்பினாய் *
 ஆய நின்னை யாவர் வல்லர் * அம்பரத்தொடு இம்பராய்? **
 மாய மாய மாயை கொல் * அது அன்றி நீ வகுத்தலும் *
 மாய மாயம் ஆக்கினாய் * உன் மாயம் முற்றும் மாயமே (41)

Pasuram 42 · corpus 793

Pasuram 42

Study resources at Uveda
வேறு இசைந்த செக்கர் மேனி * நீறு அணிந்த புன்சடை *
 கீறு திங்கள் வைத்தவன் * கை வைத்த வன்கபால் மிசை **
 ஊறு செங் குருதியால் * நிறைத்த காரணந்தனை *
 ஏறு சென்று அடர்த்த ஈச * பேசு கூசம் இன்றியே (42)

Pasuram 43 · corpus 794

Pasuram 43

Study resources at Uveda
வெஞ்சினத்த வேழ வெண் * மருப்பு ஒசித்து உருத்த மா *
 கஞ்சனைக் கடிந்து * மண் அளந்து கொண்ட காலனே **
 வஞ்சனத்து வந்த பேய்ச்சி * ஆவி பாலுள் வாங்கினாய் *
 அஞ்சனத்த வண்ணன் ஆய * ஆதிதேவன் அல்லையே? (43)

Pasuram 44 · corpus 795

Pasuram 44

Study resources at Uveda
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை * பாசியின் பசும் புறம் *
 போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து * வண்டு விண்டு உலாம் **
 நீல நீர்மை என்று இவை * நிறைந்த காலம் நான்குமாய் *
 மாலின் நீர்மை வையகம் * மறைத்தது என்ன நீர்மையே? (44)

Pasuram 45 · corpus 796

Pasuram 45

Study resources at Uveda
மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் * மண்ணுளே மயங்கி நின்று *
 எண்ணும் எண் அகப்படாய் கொல் * என்ன மாயை நின் தமர் **
 கண்ணுளாய் கொல் சேயை கொல் * அனந்தன் மேல் கிடந்த எம் *
 புண்ணியா * புனந்துழாய் அலங்கல் அம் புனிதனே (45)

Pasuram 46 · corpus 797

Pasuram 46

Study resources at Uveda
தோடு பெற்ற தண் துழாய் * அலங்கல் ஆடு சென்னியாய் *
 கோடு பற்றி ஆழி ஏந்தி * அஞ்சிறைப் புள் ஊர்தியால் **
 நாடு பெற்ற நன்மை * நண்ணம் இல்லையேனும் நாயினேன் *
 வீடு பெற்று இறப்பொடும் * பிறப்பு அறுக்குமோ சொலே (46)

Pasuram 47 · corpus 798

Pasuram 47

Study resources at Uveda
காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண * விண்ணின் நாதனே *
 நீர் இடத்து அராவணைக் * கிடத்தி என்பர் அன்றியும் **
 ஓர் இடத்தை அல்லை எல்லை * இல்லை என்பர் ஆதலால் *
 சேர்வு இடத்தை நாயினேன் * தெரிந்து இறைஞ்சுமா சொலே (47)

Pasuram 48 · corpus 799

Pasuram 48

Study resources at Uveda
குன்றில் நின்று வான் இருந்து * நீள் கடல் கிடந்து * மண்
 ஒன்று சென்று அது ஒன்றை உண்டு * அது ஒன்று இடந்து பன்றியாய் **
 நன்று சென்ற நாள் அவற்றுள் * நல் உயிர் படைத்து அவர்க்கு *
 அன்று தேவு அமைத்து அளித்த * ஆதிதேவன் அல்லையே? (48)

Pasuram 49 · corpus 800

Pasuram 49

Study resources at Uveda
கொண்டை கொண்ட கோதை மீது * தேன் உலாவு கூனி கூன் *
 உண்டை கொண்டு அரங்க ஓட்டி * உள் மகிழ்ந்த நாதன் ஊர் **
 நண்டை உண்டு நாரை பேர * வாளை பாய நீலமே *
 அண்டை கொண்டு கெண்டை மேயும் * அந் தண் நீர் அரங்கமே (49)

Pasuram 50 · corpus 801

Pasuram 50

Study resources at Uveda
வெண் திரைக் கருங் கடல் * சிவந்து வேவ முன் ஒர் நாள் *
 திண் திறல் சிலைக்கை வாளி * விட்ட வீரர் சேரும் ஊர் **
 எண் திசைக் கணங்களும் * இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் *
 வண்டு இரைத்த சோலை வேலி * மன்னு சீர் அரங்கமே (50)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.