Thirumazhisai Azhwar · Reading part · pasurams 51–60
Thiruchchanda Viruththam Pasurams 51–60
10pasurams
Corpus pasurams 802–811
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
சரங்களைத் துரந்து * வில் வளைத்து இலங்கை மன்னவன் *
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த * செல்வர் மன்னு பொன் இடம் **
பரந்து பொன் நிரந்து நுந்தி * வந்து அலைக்கும் வார் புனல் *
அரங்கம் என்பர் நான் முகத்து * அயன் பணிந்த கோயிலே (51)
பொற்றை உற்ற முற்றல் யானை * போர் எதிர்ந்து வந்ததை *
பற்றி உற்று மற்று அதன் * மருப்பு ஒசித்த பாகன் ஊர் **
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் * மூன்று தண்டர் ஒன்றினர் *
அற்ற பற்றர் சுற்றி வாழும் * அந்தண் நீர் அரங்கமே (52)
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து * பைந்தலை நிலத்து உக *
கலங்க அன்று சென்று கொன்று * வென்றி கொண்ட வீரனே **
விலங்கு நூலர் வேத நாவர் * நீதியான கேள்வியார் *
வலங் கொளக் குடந்தையுள் * கிடந்த மாலும் அல்லையே? (56)
செழுங் கொழும் பெரும் பனி பொழிந்திட * உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து * விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று **
எழுந்திருந்து தேன் பொருந்து * பூம்பொழில் தழைக் கொழும் *
செழுந் தடங் குடந்தையுள் * கிடந்த மாலும் அல்லையே? (60)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.