Pasuram 71 · corpus 822
Pasuram 71
வண்டு உலாவு கோதை மாதர் * காரணத்தினால் வெகுண்டு *
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு * தோள்களைத் துணித்த நாள் **
முண்டன் நீறன் மக்கள் வெப்பு * மோடி அங்கி ஓடிடக்
கண்டு * நாணி வாணனுக்கு இரங்கினான் * எம் மாயனே (71)
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 71–80
Corpus pasurams 822–831
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 71 · corpus 822
வண்டு உலாவு கோதை மாதர் * காரணத்தினால் வெகுண்டு *
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு * தோள்களைத் துணித்த நாள் **
முண்டன் நீறன் மக்கள் வெப்பு * மோடி அங்கி ஓடிடக்
கண்டு * நாணி வாணனுக்கு இரங்கினான் * எம் மாயனே (71)
Pasuram 72 · corpus 823
போதில் மங்கை பூதலக் கிழத்தி * தேவி அன்றியும் *
போது தங்கு நான்முகன் மகன் * அவன் மகன் சொலில் **
மாது தங்கு கூறன் * ஏறது ஊர்தி என்று வேத நூல் *
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை * மற்று உரைக்கிலே (72)
Pasuram 73 · corpus 824
மரம் பொதச் சரம் துரந்து * வாலி வீழ முன் ஒர் நாள் *
உரம் பொதச் சரம் துரந்த * உம்பர் ஆளி எம்பிரான் **
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு * அலாது வானம் ஆளிலும் *
நிரம்பு நீடு போகம் * எத்திறத்தும் யார்க்கும் இல்லையே (73)
Pasuram 74 · corpus 825
அறிந்து அறிந்து வாமனன் * அடியிணை வணங்கினால் *
செறிந்து எழுந்த ஞானமோடு * செல்வமும் சிறந்திடும் **
மறிந்து எழுந்த தெண் திரையுள் * மன்னு மாலை வாழ்த்தினால் *
பறிந்து எழுந்து தீவினைகள் * பற்று அறுதல் பான்மையே (74)
Pasuram 75 · corpus 826
ஒன்றி நின்று நற்றவம் செய்து * ஊழி ஊழிதோறு எலாம் *
நின்று நின்று அவன் குணங்கள் * உள்ளி உள்ளம் தூயராய் **
சென்று சென்று தேவதேவர் * உம்பர் உம்பர் உம்பராய் *
அன்றி எங்கள் செங்கண் மாலை * யாவர் காண வல்லரே? (75)
Pasuram 76 · corpus 827
புன் புல வழி அடைத்து * அரக்கு இலச்சினை செய்து *
நன் புல வழி திறந்து * ஞான நற்சுடர் கொளீஇ **
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி * உள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழியானை * யாவர் காண வல்லரே? (76)
Pasuram 77 · corpus 828
எட்டும் எட்டும் எட்டுமாய் * ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் *
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி * நின்ற ஆதிதேவனை **
எட்டின் ஆய பேதமோடு * இறைஞ்சி நின்று அவன் பெயர் *
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் * வல்லர் வானம் ஆளவே (77)
Pasuram 78 · corpus 829
சோர்வு இலாத காதலால் * தொடக்கு அறா மனத்தராய் *
நீர் அராவணைக் கிடந்த * நின்மலன் நலங் கழல் **
ஆர்வமோடு இறைஞ்சி நின்று * அவன் பேர் எட்டு எழுத்துமே *
வாரம் ஆக ஓதுவார்கள் * வல்லர் வானம் ஆளவே (78)
Pasuram 79 · corpus 830
பத்தினோடு பத்துமாய் * ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய் *
பத்து நால் திசைக்கண் நின்ற * நாடு பெற்ற நன்மையாய் **
பத்தின் ஆய தோற்றமோடு * ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால் *
பத்தராம் அவர்க்கு அலாது * முத்தி முற்றல் ஆகுமே? (79)
Pasuram 80 · corpus 831
வாசி ஆகி நேசம் இன்றி * வந்து எதிர்ந்த தேனுகன் *
நாசம் ஆகி நாள் உலப்ப * நன்மை சேர் பனங்கனிக்கு **
வீசி மேல் நிமிர்ந்த தோளின் * இல்லை ஆக்கினாய் * கழற்கு
ஆசை ஆம் அவர்க்கு அலால் * அமரர் ஆகல் ஆகுமே? (80)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.