Corpus pasurams 892–901

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 21 · corpus 892

Pasuram 21

Study resources at Uveda
பணிவினால் மனமது ஒன்றிப் * பவள வாய் அரங்கனார்க்குத் *
 துணிவினால் வாழ மாட்டாத் * தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் **
 அணியின் ஆர் செம்பொன் ஆய * அருவரை அனைய கோயில் *
 மணி அனார் கிடந்தவாற்றை * மனத்தினால் நினைக்கல் ஆமே? (21)

Pasuram 22 · corpus 893

Pasuram 22

Study resources at Uveda
பேசிற்றே பேசல் அல்லால் * பெருமை ஒன்று உணரல் ஆகாது *
 ஆசற்றார் தங்கட்கு அல்லால் * அறியல் ஆவானும் அல்லன் **
 மாசற்றார் மனத்துளானை * வணங்கி நாம் இருப்பது அல்லால் *
 பேசத்தான் ஆவது உண்டோ? * பேதை நெஞ்சே நீ சொல்லாய் (22)

Pasuram 23 · corpus 894

Pasuram 23

Study resources at Uveda
கங்கையில் புனிதம் ஆய * காவிரி நடுவுபாட்டு *
 பொங்குநீர் பரந்து பாயும் * பூம்பொழில் அரங்கந் தன்னுள் **
 எங்கள் மால் இறைவன் ஈசன் * கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் *
 எங்ஙனம் மறந்து வாழ்கேன்? * ஏழையேன் ஏழையேனே (23)

Pasuram 24 · corpus 895

Pasuram 24

Study resources at Uveda
வெள்ள நீர் பரந்து பாயும் * விரி பொழில் அரங்கந் தன்னுள் *
 கள்வனார் கிடந்தவாறும் * கமல நன் முகமும் கண்டும் **
 உள்ளமே வலியை போலும் * ஒருவன் என்று உணர மாட்டாய் *
 கள்ளமே காதல் செய்து * உன் கள்ளத்தே கழிக்கின்றாயே (24)

Pasuram 25 · corpus 896

Pasuram 25

Study resources at Uveda
குளித்து மூன்று அனலை ஓம்பும் * குறிகொள் அந்தணமை தன்னை *
 ஒளித்திட்டேன் என்கண் இல்லை * நின்கணும் பத்தன் அல்லேன் **
 களிப்பது என் கொண்டு? நம்பீ * கடல்வண்ணா கதறுகின்றேன் *
 அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் * அரங்க மா நகருளானே (25)

Pasuram 26 · corpus 897

Pasuram 26

Study resources at Uveda
போதெல்லாம் போது கொண்டு * உன் பொன்னடி புனைய மாட்டேன் *
 தீதிலா மொழிகள் கொண்டு * உன் திருக்குணம் செப்ப மாட்டேன் **
 காதலால் நெஞ்சம் அன்பு * கலந்திலேன் அது தன்னாலே *
 ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே * என் செய்வான் தோன்றினேனே? (26)

Pasuram 27 · corpus 898

Pasuram 27

Study resources at Uveda
குரங்குகள் மலையை நூக்கக் * குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி *
 தரங்க நீர் அடைக்கல் உற்ற * சலம் இலா அணிலும் போலேன் **
 மரங்கள் போல் வலிய நெஞ்ச * வஞ்சனேன் நெஞ்சு தன்னால் *
 அரங்கனார்க்கு ஆட் செய்யாதே * அளியத்தேன் அயர்க்கின்றேனே (27)

Pasuram 28 · corpus 899

Pasuram 28

Study resources at Uveda
உம்பரால் அறியல் ஆகா * ஒளியுளார் ஆனைக்கு ஆகி *
 செம் புலால் உண்டு வாழும் * முதலைமேல் சீறி வந்தார் **
 நம் பரம் ஆயது உண்டே? * நாய்களோம் சிறுமை ஓரா *
 எம்பிராற்கு ஆட் செய்யாதே * என் செய்வான் தோன்றினேனே (28)

Pasuram 29 · corpus 900

Pasuram 29

Study resources at Uveda
ஊர் இலேன் காணி இல்லை * உறவு மற்று ஒருவர் இல்லை *
 பாரில் நின் பாத மூலம் * பற்றிலேன் பரம மூர்த்தி **
 காரொளி வண்ணனே * கண்ணனே கதறுகின்றேன் *
 ஆர் உளர் ? களைகண் அம்மா * அரங்க மா நகருளானே (29)

Pasuram 30 · corpus 901

Pasuram 30

Study resources at Uveda
மனத்தில் ஓர் தூய்மை இல்லை * வாயில் ஓர் இன்சொல் இல்லை *
 சினத்தினால் செற்றம் நோக்கித் * தீவிளி விளிவன் வாளா **
 புனத்துழாய் மாலையானே * பொன்னி சூழ் திருவரங்கா *
 எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? * என்னை ஆளுடைய கோவே (30)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.