Pasuram 100 · corpus 2890
Pasuram 100
பொரு மா நீள் படை * ஆழி சங்கத்தொடு *
திரு மா நீள் கழல் * ஏழ் உலகும் தொழ **
ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த * அக்
கரு மாணிக்கம் * என் கண்ணுளது ஆகுமே (1)
Nammazhvar · Pasurams 100–110
Corpus pasurams 2890–2900
This page preserves the source-defined decade 1, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 100 · corpus 2890
பொரு மா நீள் படை * ஆழி சங்கத்தொடு *
திரு மா நீள் கழல் * ஏழ் உலகும் தொழ **
ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த * அக்
கரு மாணிக்கம் * என் கண்ணுளது ஆகுமே (1)
Pasuram 101 · corpus 2891
கண்ணுள்ளே நிற்கும் * காதன்மையால் தொழில் *
எண்ணிலும் வரும் * என் இனி வேண்டுவம் ? **
மண்ணும் நீரும் * எரியும் நல் வாயுவும் *
விண்ணும் ஆய் விரியும் * எம் பிரானையே? (2)
Pasuram 102 · corpus 2892
எம்பிரானை * எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை * தாமரைக் கண்ணனை **
கொம்பு அராவு * நுண் நேர் இடை மார்பனை *
எம்பிரானைத் தொழாய் * மட நெஞ்சமே (3)
Pasuram 103 · corpus 2893
நெஞ்சமே நல்லை நல்லை * உன்னைப் பெற்றால்
என் செய்யோம்? * இனி என்ன குறைவினம்? **
மைந்தனை * மலராள் மணவாளனை *
துஞ்சும்போதும் * விடாது தொடர்கண்டாய் (4)
Pasuram 104 · corpus 2894
கண்டாயே நெஞ்சே ! * கருமங்கள் வாய்க்கின்று * ஓர்
எண் தானும் இன்றியே * வந்து இயலுமாறு **
உண்டானை * உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானை * கண்டுகொண்டனை நீயுமே (5)
Pasuram 105 · corpus 2895
நீயும் நானும் * இந் நேர்நிற்கில் * மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் * நெஞ்சமே சொன்னேன் **
தாயும் தந்தையும் ஆய் * இவ் உலகினில்
வாயும் ஈசன் * மணிவண்ணன் எந்தையே (6)
Pasuram 106 · corpus 2896
எந்தையே என்றும் * எம் பெருமான் என்றும் *
சிந்தையுள் வைப்பன் * சொல்லுவன் பாவியேன் **
எந்தை! எம் பெருமான் ! என்று * வானவர்
சிந்தையுள் வைத்துச் * சொல்லும் செல்வனையே (7)
Pasuram 107 · corpus 2897
செல்வ நாரணன் * என்ற சொல் கேட்டலும் *
மல்கும் கண் பனி * நாடுவன் மாயமே **
அல்லும் நன் பகலும் * இடைவீடு இன்றி *
நல்கி என்னை விடான் * நம்பி நம்பியே (8)
Pasuram 108 · corpus 2898
நம்பியை * தென் குறுங்குடி நின்ற * அச்
செம்பொனே திகழும் * திரு மூர்த்தியை **
உம்பர் வானவர் * ஆதி அம் சோதியை *
எம் பிரானை * என் சொல்லி மறப்பனோ? (9)
Pasuram 109 · corpus 2899
மறப்பும் ஞானமும் * நான் ஒன்று உணர்ந்திலன் *
மறக்கும் என்று * செந்தாமரைக் கண்ணொடு **
மறப்பு அற என் உள்ளே * மன்னினான் தன்னை *
மறப்பனோ ? * இனி யான் என் மணியையே? (10)
Pasuram 110 · corpus 2900
மணியை * வானவர் கண்ணனை தன்னது ஓர்
அணியை * தென் குருகூர்ச் சடகோபன் ** சொல்
பணிசெய் ஆயிரத்துள் * இவை பத்துடன் *
தணிவிலர் கற்பரேல் * கல்வி வாயுமே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.