Corpus pasurams 2901–2911

This page preserves the source-defined decade 2, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 111 · corpus 2901

Pasuram 111

Study resources at Uveda
வாயும் திரை * உகளும் கானல் மட நாராய் *
 ஆயும் அமர் உலகும் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் **
 நோயும் பயலைமையும் * மீது ஊர எம்மேபோல் *
 நீயும் திருமாலால் * நெஞ்சம் கோள் பட்டாயே? (1)

Pasuram 112 · corpus 2902

Pasuram 112

Study resources at Uveda
கோள் பட்ட சிந்தையாய்க் * கூர்வாய அன்றிலே *
 சேண் பட்ட யாமங்கள் * சேராது இரங்குதியால் **
 ஆள் பட்ட எம்மேபோல் * நீயும் அரவு அணையான் *
 தாள் பட்ட தண் துழாய்த் * தாமம் காமுற்றாயே? (2)

Pasuram 113 · corpus 2903

Pasuram 113

Study resources at Uveda
காமுற்ற கையறவோடு * எல்லே ! இராப்பகல் *
 நீ முற்றக் கண்துயிலாய் * நெஞ்சு உருகி ஏங்குதியால் **
 தீ முற்றத் தென் இலங்கை * ஊட்டினான் தாள் நயந்த *
 யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே (3)

Pasuram 114 · corpus 2904

Pasuram 114

Study resources at Uveda
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் *
 சுடர் கொள் இராப்பகல் * துஞ்சாயால் தண் வாடாய் **
 அடல் கொள் படை ஆழி * அம்மானைக் காண்பான் நீ *
 உடலம் நோய் உற்றாயோ? * ஊழிதோறு ஊழியே? (4)

Pasuram 115 · corpus 2905

Pasuram 115

Study resources at Uveda
ஊழிதோறு ஊழி * உலகுக்கு நீர்கொண்டு *
 தோழியரும் யாமும் போல் * நீராய் நெகிழ்கின்ற **
 வாழிய வானமே ! * நீயும் மதுசூதன் *
 பாழிமையில் பட்டு * அவன்கண் பாசத்தால் நைவாயே? (5)

Pasuram 116 · corpus 2906

Pasuram 116

Study resources at Uveda
நைவாய எம்மேபோல் * நாள் மதியே !நீ இந் நாள் *
 மை வான் இருள் அகற்றாய் * மாழாந்து தேம்புதியால் **
 ஐ வாய் அரவு அணைமேல் * ஆழிப் பெருமானார் *
 மெய் வாசகம் கேட்டு * உன் மெய்ந்நீர்மை தோற்றாயே? (6)

Pasuram 117 · corpus 2907

Pasuram 117

Study resources at Uveda
தோற்றோம் மட நெஞ்சம் * எம் பெருமான் நாரணற்கு * எம்
 ஆற்றாமை சொல்லி * அழுவோமை நீ நடுவே **
 வேற்றோர் வகையில் * கொடிதாய் எனை ஊழி *
 மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே (7)

Pasuram 118 · corpus 2908

Pasuram 118

Study resources at Uveda
இருளின் திணி வண்ணம் * மா நீர்க் கழியே ! போய் *
 மருளுற்று இராப்பகல் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் **
 உருளும் சகடம் * உதைத்த பெருமானார் *
 அருளின் பெரு நசையால் * ஆழாந்து நொந்தாயே? (8)

Pasuram 119 · corpus 2909

Pasuram 119

Study resources at Uveda
நொந்து ஆராக் காதல் நோய் * மெல் ஆவி உள் உலர்த்த *
 நந்தா விளக்கமே * நீயும் அளியத்தாய் **
 செந்தாமரைத் தடங்கண் * செங்கனி வாய் எம் பெருமான் *
 அம் தாமம் தண் துழாய் * ஆசையால் வேவாயே? (9)

Pasuram 120 · corpus 2910

Pasuram 120

Study resources at Uveda
வேவு ஆரா வேட்கை நோய் * மெல் ஆவி உள் உலர்த்த *
 ஓவாது இராப்பகல் * உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய் **
 மா வாய் பிளந்து * மருதிடை போய் மண் அளந்த *
 மூவா முதல்வா * இனி எம்மைச் சோரேலே (10)

Pasuram 121 · corpus 2911

Pasuram 121

Study resources at Uveda
சோராத எப் பொருட்கும் * ஆதியாம் சோதிக்கே *
 ஆராத காதல் * குருகூர்ச் சடகோபன் **
 ஓராயிரம் சொன்ன * அவற்றுள் இவை பத்தும் *
 சோரார் விடார் கண்டீர் * வைகுந்தம் திண்ணெனவே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.