Pasuram 89 · corpus 2879
Pasuram 89
இவையும் அவையும் * உவையும் இவரும் அவரும் உவரும் *
எவையும் எவரும் தன்னுள்ளே * ஆகியும் ஆக்கியும் காக்கும் **
அவையுள் தனிமுதல் எம்மான் * கண்ண பிரான் என் அமுதம் *
சுவையன் திருவின் மணாளன் * என்னுடைச் சூழல் உளானே (1)
Nammazhvar · Pasurams 89–99
Corpus pasurams 2879–2889
This page preserves the source-defined decade 1, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 89 · corpus 2879
இவையும் அவையும் * உவையும் இவரும் அவரும் உவரும் *
எவையும் எவரும் தன்னுள்ளே * ஆகியும் ஆக்கியும் காக்கும் **
அவையுள் தனிமுதல் எம்மான் * கண்ண பிரான் என் அமுதம் *
சுவையன் திருவின் மணாளன் * என்னுடைச் சூழல் உளானே (1)
Pasuram 90 · corpus 2880
சூழல் பலபல வல்லான் * தொல்லை அம் காலத்து உலகை *
கேழல் ஒன்று ஆகி இடந்த * கேசவன் என்னுடை அம்மான் **
வேழ மருப்பை ஒசித்தான் * விண்ணவர்க்கு எண்ணல் அரியான் *
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான் * அவன் என் அருகலிலானே (2)
Pasuram 91 · corpus 2881
அருகல் இலாய பெரும் சீர் * அமரர்கள் ஆதி முதல்வன் *
கருகிய நீல நன் மேனி வண்ணன் * செந்தாமரைக் கண்ணன் **
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் * பூமகளார் தனிக் கேள்வன் *
ஒருகதியின் சுவை தந்திட்டு * ஒழிவு இலன் என்னோடு உடனே (3)
Pasuram 92 · corpus 2882
உடன் அமர் காதல் மகளிர் * திருமகள் மண்மகள் ஆயர் *
மட மகள் * என்று இவர் மூவர் ஆளும் * உலகமும் மூன்றே **
உடன் அவை ஒக்க விழுங்கி * ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான் *
கடல் மலி மாயப் பெருமான் * கண்ணன் என் ஒக்கலையானே (4)
Pasuram 93 · corpus 2883
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று * தந்திட வாங்கி *
செக்கம் செக அன்று அவள்பால் * உயிர் செக உண்ட பெருமான் **
நக்க பிரானோடு * அயனும் இந்திரனும் முதலாக *
ஒக்கவும் தோற்றிய ஈசன் * மாயன் என் நெஞ்சின் உளானே (5)
Pasuram 94 · corpus 2884
மாயன் என் நெஞ்சின் உள்ளான் * மற்றும் எவர்க்கும் அதுவே *
காயமும் சீவனும் தானே * காலும் எரியும் அவனே **
சேயன் அணியன் எவர்க்கும் * சிந்தைக்கும் கோசரம் அல்லன் *
தூயன் துயக்கன் மயக்கன் * என்னுடைத் தோளிணையானே (6)
Pasuram 95 · corpus 2885
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் * சுடர் முடி மேலும் *
தாள் இணை மேலும் புனைந்த * தண் அம் துழாய் உடை அம்மான் **
கேள் இணை ஒன்றும் இலாதான் * கிளரும் சுடர் ஒளி மூர்த்தி *
நாள் அணைந்து ஒன்றும் அகலான் * என்னுடை நாவின் உளானே (7)
Pasuram 96 · corpus 2886
நாவினுள் நின்று மலரும் * ஞானக் கலைகளுக்கு எல்லாம் *
ஆவியும் ஆக்கையும் தானே * அழிப்போடு அளிப்பவன் தானே **
பூ இயல் நால் தடம் தோளன் * பொரு படை ஆழி சங்கு ஏந்தும் *
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் * என் கண்ணின் உளானே (8)
Pasuram 97 · corpus 2887
கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் * காண்பன் அவன் கண்களாலே *
அமலங்கள் ஆக விழிக்கும் * ஐம்புலனும் அவன் மூர்த்தி **
கமலத்து அயன் நம்பி தன்னைக் * கண்ணுதலானொடும் தோற்றி *
அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி * என் நெற்றி உளானே (9)
Pasuram 98 · corpus 2888
நெற்றியுள் நின்று என்னை ஆளும் * நிரை மலர்ப் பாதங்கள் சூடி *
கற்றைத் துழாய் முடிக் கோலக் * கண்ண பிரானைத் தொழுவார் **
ஒற்றைப் பிறை அணிந்தானும் * நான்முகனும் இந்திரனும் *
மற்றை அமரரும் எல்லாம் வந்து * எனது உச்சியுளானே (10)
Pasuram 99 · corpus 2889
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்குக் * கண்ண பிராற்கு *
இச்சையுள் செல்ல உணர்த்தி * வண் குருகூர்ச் சடகோபன் **
இச் சொன்ன ஆயிரத்துள் * இவையும் ஓர் பத்து எம்பிராற்கு *
நிச்சலும் விண்ணப்பம் செய்ய * நீள் கழல் சென்னி பொருமே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.