This page preserves the source-defined decade 1, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
எளிவரும் இயல்வினன் * நிலை வரம்பு இல பல பிறப்பாய் *
ஒளிவரும் முழு நலம் * முதல் இல * கேடு இல வீடு ஆம் **
தெளிதரும் நிலைமையது * ஒழிவு இலன் முழுவதும் இறையோன் *
அளிவரும் அருளினோடு * அகத்தனன் புறத்தனன் அமைந்தே (2)
அமைவு உடை அறநெறி * முழுவதும் உயர்வு அற உயர்ந்து *
அமைவு உடை முதல் கெடல் * ஒடிவு இடை அற நிலம் அது ஆம் **
அமைவு உடை அமரரும் * யாவையும் யாவரும் தான் ஆம் *
அமைவு உடை நாரணன் மாயையை * அறிபவர் யாரே? (3)
யாரும் ஓர் நிலைமையன் என * அறிவு அரிய எம் பெருமான் *
யாரும் ஓர் நிலைமையன் என * அறிவு எளிய எம் பெருமான் **
பேரும் ஓர் ஆயிரம் * பிற பல உடைய எம் பெருமான் *
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை * இலது இல்லை பிணக்கே (4)
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று * உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை *
உணர்ந்து உணர்ந்து உணரிலும் * இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் ! **
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து * அரி அயன் அரன் என்னும் இவரை *
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து * இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே (6)
ஒன்று எனப் பல என * அறிவு அரும் வடிவினுள் நின்ற *
நன்று எழில் நாரணன் * நான்முகன் அரன் என்னும் இவரை **
ஒன்ற நும் மனத்து வைத்து * உள்ளி நும் இரு பசை அறுத்து *
நன்று என நலம் செய்வது * அவனிடை நம்முடை நாளே (7)
நாளும் நின்று அடு நம பழமை * அம் கொடுவினை உடனே
மாளும் * ஓர் குறைவு இல்லை * மனன் அகம் மலம் அறக் கழுவி **
நாளும் நம் திரு உடை அடிகள் தம் * நலம் கழல் வணங்கி *
மாளும் ஓர் இடத்திலும் * வணக்கொடு மாள்வது வலமே (8)
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் * இடம்பெறத் துந்தித்
தலத்து * எழு திசைமுகன் படைத்த * நல் உலகமும் தானும்
புலப்பட ** பின்னும் தன் உலகத்தில் * அகத்தனன் தானே
சொலப் புகில் * இவை பின்னும் வயிற்று உள * இவை அவன் துயக்கே (9)