This page preserves the source-defined decade 1, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
என் செய்ய தாமரைக்கண் * பெருமானார்க்கு என் தூதாய் *
என் செய்யும் உரைத்தக்கால்? * இனக் குயில்காள் நீர் அலிரே? **
முன் செய்த முழுவினையால் * திருவடிக்கீழ்க் குற்றேவல் *
முன் செய்ய முயலாதேன் * அகல்வதுவோ? விதியினமே (2)
என் நீர்மை கண்டு இரங்கி * இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு * என் சொல்லி யான் சொல்லுகேனோ? **
நன் நீர்மை இனி * அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் * நல்குதிரோ? நல்கீரோ? (4)
அருளாத நீர் அருளி * அவர் ஆவி துவராமுன் *
அருள் ஆழிப் புட்கடவீர் * அவர் வீதி ஒருநாள் என்று **
அருள் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே * யாமும் என் பிழைத்தோமே? (6)
நீ அலையே? சிறு பூவாய் * நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன * நுவலாதே இருந்தொழிந்தாய் **
சாயலொடு மணிமாமை * தளர்ந்தேன் நான் * இனி உனது
வாய் அலகில் இன் அடிசில் * வைப்பாரை நாடாயே (8)
நாடாத மலர் நாடி * நாள்தோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் * வைக்கவே வகுக்கின்று **
வீடாடி வீற்றிருத்தல் * வினை அற்றது என் செய்வதோ? *
ஊடாடு பனி வாடாய் * உரைத்து ஈராய் எனது உடலே (9)
உடல் ஆழிப் பிறப்பு வீடு * உயிர் முதலா முற்றுமாய் *
கடல் ஆழி நீர் தோற்றி * அதனுள்ளே கண்வளரும் **
அடல் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி *
விடல் ஆழி மட நெஞ்சே * வினையோம் ஒன்றாம் அளவே (10)
அளவு இயன்ற ஏழ் உலகத்து அவர் * பெருமான் கண்ணனை *
வள வயல் சூழ் வண் குருகூர்ச் * சடகோபன் வாய்ந்து உரைத்த **
அளவு இயன்ற அந்தாதி * ஆயிரத்துள் இப் பத்தின் *
வள உரையால் பெறலாகும் * வான் ஓங்கு பெரு வளமே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.