This page preserves the source-defined decade 1, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி * இமையோர் பலரும் முனிவரும் *
புனைந்த கண்ணி நீர் சாந்தம் * புகையோடு ஏந்தி வணங்கினால் **
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் * வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை * மாசூணாதோ? மாயோனே !(2)
மா யோனிகளாய் நடை கற்ற * வானோர் பலரும் முனிவரும் *
நீ யோனிகளைப் படை என்று * நிறை நான்முகனைப் படைத்தவன் **
சேயோன் எல்லா அறிவுக்கும் * திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் * எல்லா எவ் உயிர்க்கும் தாயோன் * தான் ஓர் உருவனே (3)
தான் ஓர் உருவே தனி வித்து ஆய்த் * தன்னில் மூவர் முதலாய *
வானோர் பலரும் முனிவரும் * மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி * அதனுள் கண்வளரும் *
வானோர் பெருமான் மா மாயன் * வைகுந்தன் எம் பெருமானே (4) **
மான் ஏய் நோக்கி மடவாளை * மார்பில் கொண்டாய் ! மாதவா ! *
கூனே சிதைய உண்டை வில் * நிறத்தில் தெறித்தாய் * கோவிந்தா ! **
வான் ஆர் சோதி மணிவண்ணா ! மதுசூதா ! நீ அருளாய் * உன்
தேனே மலரும் திருப்பாதம் * சேருமாறு வினையேனே (5)
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து * மாயப் பற்று அறுத்து *
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு * திருத்துவான் **
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி * அகலம் கீழ் மேல் அளவு இறந்து *
நேர்ந்த உருவாய் அருவாகும் * இவற்றின் உயிராம் நெடுமாலே !(10)
மாலே ! மாயப் பெருமானே ! * மா மாயனே ! என்று என்று *
மாலே ஏறி மால் அருளால் * மன்னு குருகூர்ச் சடகோபன் **
பால் ஏய் தமிழர் இசைகாரர் * பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே * பட்ட இவை பத்தும் * வல்லார்க்கு இல்லை பரிவதே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.