Pasuram 56 · corpus 2846
Pasuram 56
பரிவது இல் ஈசனைப் பாடி * விரிவது மேவல் உறுவீர் **
பிரிவகை இன்றி நல் நீர் தூய் * புரிவதுவும் புகை பூவே (1)
Nammazhvar · Pasurams 56–66
Corpus pasurams 2846–2856
This page preserves the source-defined decade 1, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 56 · corpus 2846
பரிவது இல் ஈசனைப் பாடி * விரிவது மேவல் உறுவீர் **
பிரிவகை இன்றி நல் நீர் தூய் * புரிவதுவும் புகை பூவே (1)
Pasuram 57 · corpus 2847
மதுவார் தண் அம் துழாயான் * முது வேத முதல்வனுக்கு **
எது ஏது ? என் பணி ? என்னாது * அதுவே ஆள் செய்யும் ஈடே (2)
Pasuram 58 · corpus 2848
ஈடும் எடுப்பும் இல் ஈசன் * மாடு விடாது என் மனனே **
பாடும் என் நா அவன் பாடல் * ஆடும் என் அங்கம் அணங்கே (3)
Pasuram 59 · corpus 2849
அணங்கு என ஆடும் என் அங்கம் * வணங்கி வழிபடும் ஈசன் **
பிணங்கி அமரர் பிதற்றும் * குணங்கெழு கொள்கையினானே (4)
Pasuram 60 · corpus 2850
கொள்கை கொளாமை * இலாதான் எள்கல் இராகம் இலாதான் **
விள்கை விள்ளாமை விரும்பி * உள் கலந்தார்க்கு ஓர் அமுதே (5)
Pasuram 61 · corpus 2851
அமுதம் அமரர்கட்கு ஈந்த * நிமிர் சுடர் ஆழி நெடுமால் **
அமுதிலும் ஆற்ற இனியன் * நிமிர் திரை நீள் கடலானே (6)
Pasuram 62 · corpus 2852
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் * தோள்கள் தலை துணிசெய்தான் **
தாள்கள் தலையில் வணங்கி * நாள்கள் தலைக்கழிமினே (7)
Pasuram 63 · corpus 2853
கழிமின் தொண்டீர்கள் ! கழித்து * தொழுமின் அவனைத் தொழுதால் **
வழி நின்ற வல்வினை மாள்வித்து * அழிவின்றி ஆக்கம் தருமே (8)
Pasuram 64 · corpus 2854
தருமம் அரும் பயன் ஆய * திருமகளார் தனிக் கேள்வன் **
பெருமை உடைய பிரானார் * இருமை வினை கடிவாரே (9)
Pasuram 65 · corpus 2855
கடிவார் தீய வினைகள் * நொடியாரும் அளவைக்கண் **
கொடியா அடு புள் உயர்த்த * வடிவு ஆர் மாதவனாரே (10)
Pasuram 66 · corpus 2856
மாதவன்பால் சடகோபன் * தீது அவம் இன்றி உரைத்த **
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து * ஓத வல்லார் பிறவாரே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.