Pasuram 67 · corpus 2857
Pasuram 67
பிறவித்துயர் அற * ஞானத்துள் நின்று *
துறவிச் சுடர் * விளக்கம் தலைப்பெய்வார் **
அறவனை * ஆழிப்படை அந்தணனை *
மறவியை இன்றி * மனத்து வைப்பாரே (1)
Nammazhvar · Pasurams 67–77
Corpus pasurams 2857–2867
This page preserves the source-defined decade 1, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 67 · corpus 2857
பிறவித்துயர் அற * ஞானத்துள் நின்று *
துறவிச் சுடர் * விளக்கம் தலைப்பெய்வார் **
அறவனை * ஆழிப்படை அந்தணனை *
மறவியை இன்றி * மனத்து வைப்பாரே (1)
Pasuram 68 · corpus 2858
வைப்பு ஆம் மருந்து ஆம் * அடியரை * வல்வினைத்
துப்பு ஆம் புலன் ஐந்தும் * துஞ்சக்கொடான் அவன் **
எப்பால் எவர்க்கும் * நலத்தால் உயர்ந்து உயர்ந்து *
அப்பாலவன் * எங்கள் ஆயர் கொழுந்தே (2)
Pasuram 69 · corpus 2859
ஆயர் கொழுந்தாய் * அவரால் புடையுண்ணும் *
மாயப் பிரானை * என் மாணிக்கச் சோதியை **
தூய அமுதைப் * பருகிப் பருகி * என்
மாயப் பிறவி * மயர்வு அறுத்தேனே (3)
Pasuram 70 · corpus 2860
மயர்வு அற என் மனத்தே * மன்னினான் தன்னை *
உயர்வினையே தரும் * ஒண் சுடர்க் கற்றையை **
அயர்வு இல் அமரர்கள் * ஆதிக் கொழுந்தை * என்
இசைவினை * என் சொல்லி யான் விடுவேனோ? (4)
Pasuram 71 · corpus 2861
விடுவேனோ? என் விளக்கை * என் ஆவியை *
நடுவே வந்து * உய்யக் கொள்கின்ற நாதனை **
தொடுவே செய்து * இள ஆய்ச்சியர் கண்ணினுள் *
விடவே செய்து * விழிக்கும் பிரானையே? (5)
Pasuram 72 · corpus 2862
பிரான் * பெரு நிலம் கீண்டவன் * பின்னும்
விரா அய் மலர்த் துழாய் * வேய்ந்த முடியன் **
மராமரம் * எய்த மாயவன் * என்னுள்
இரான் எனில் * பின்னை யான் ஒட்டுவேனோ? (6) *
Pasuram 73 · corpus 2863
யான் ஒட்டி என்னுள் * இருத்துவன் என்றிலன் *
தான் ஒட்டி வந்து * என் தனி நெஞ்சை வஞ்சித்து **
ஊன் ஒட்டி நின்று * என் உயிரில் கலந்து * இயல்
வான் ஒட்டுமோ? * இனி என்னை நெகிழ்க்கவே? (7)
Pasuram 74 · corpus 2864
என்னை நெகிழ்க்கிலும் * என்னுடை நன் நெஞ்சம்
தன்னை * அகல்விக்கத் * தானும் கில்லான் இனி **
பின்னை நெடும் பணைத் தோள் * மகிழ் பீடு உடை *
முன்னை அமரர் * முழுமுதல் தானே (8)
Pasuram 75 · corpus 2865
அமரர் முழுமுதல் * ஆகிய ஆதியை *
அமரர்க்கு அமுது ஈந்த * ஆயர் கொழுந்தை **
அமர அழும்பத் * துழாவி என் ஆவி *
அமரத் தழுவிற்று * இனி அகலுமோ? (9)
Pasuram 76 · corpus 2866
அகலில் அகலும் * அணுகில் அணுகும் *
புகலும் அரியன் * பொரு அல்லன் எம்மான் **
நிகர் இல் அவன் புகழ் * பாடி இளைப்பு இலம் *
பகலும் இரவும் * படிந்து குடைந்தே (10)
Pasuram 77 · corpus 2867
* குடைந்து வண்டு உண்ணும் * துழாய் முடியானை *
அடைந்த தென் குருகூர்ச் * சடகோபன் **
மிடைந்த சொல் தொடை * ஆயிரத்து இப் பத்து *
உடைந்து நோய்களை * ஓடுவிக்குமே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.