Pasuram 78 · corpus 2868
Pasuram 78
ஓடும் புள் * ஏறி சூடும் தண் துழாய் **
நீடு நின்றவை * ஆடும் அம்மானே (1)
Nammazhvar · Pasurams 78–88
Corpus pasurams 2868–2878
This page preserves the source-defined decade 1, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 78 · corpus 2868
ஓடும் புள் * ஏறி சூடும் தண் துழாய் **
நீடு நின்றவை * ஆடும் அம்மானே (1)
Pasuram 79 · corpus 2869
அம்மானாய்ப் பின்னும் * எம் மாண்பும் ஆனான் **
வெம் மா வாய் கீண்ட * செம் மா கண்ணனே (2)
Pasuram 80 · corpus 2870
கண் ஆவான் என்றும் * மண்ணோர் விண்ணோர்க்கு **
தண் ஆர் வேங்கட * விண்ணோர் வெற்பனே (3)
Pasuram 81 · corpus 2871
வெற்பை ஒன்று * எடுத்து ஒற்கம் இன்றியே **
நிற்கும் அம்மான் சீர் * கற்பன் வைகலே (4)
Pasuram 82 · corpus 2872
வைகலும் வெண்ணெய் * கைகலந்து உண்டான் **
பொய் கலவாது * என் மெய் கலந்தானே (5)
Pasuram 83 · corpus 2873
கலந்து என் ஆவி * நலம் கொள் நாதன் **
புலன் கொள் மாணாய் * நிலம் கொண்டானே (6)
Pasuram 84 · corpus 2874
கொண்டான் ஏழ் விடை * உண்டான் ஏழ் வையம் **
தண் தாமம் செய்து * என் எண் தான் ஆனானே (7)
Pasuram 85 · corpus 2875
ஆனான் ஆன் ஆயன் * மீனோடு ஏனமும் **
தான் ஆனான் என்னில் * தான் ஆய சங்கே (8)
Pasuram 86 · corpus 2876
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய * நங்கள் நாதனே (9)
Pasuram 87 · corpus 2877
நாதன் ஞாலம் கொள் * பாதன் என் அம்மான் **
ஓதம் போல் கிளர் * வேத நீரனே (10)
Pasuram 88 · corpus 2878
நீர்புரை வண்ணன் * சீர் சடகோபன் **
நேர்தல் ஆயிரத்து * ஓர்தல் இவையே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.