Corpus pasurams 3783–3793

This page preserves the source-defined decade 10, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 993 · corpus 3783

Pasuram 993

Study resources at Uveda
தாள தாமரைத் * தடம் அணி வயல் திருமோகூர் *
 நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று * அசுரரைத் தகர்க்கும் **
 தோளும் நான்கு உடைச் * சுரி குழல் கமலக் கண் கனி வாய் *
 காளமேகத்தை அன்றி * மற்றொன்று இலம் கதியே (1)

Pasuram 994 · corpus 3784

Pasuram 994

Study resources at Uveda
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் * ஈன் தண் துழாயின் *
 அலங்கல் அம் கண்ணி * ஆயிரம் பேர் உடை அம்மான் **
 நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் * திருமோகூர் *
 நலம் கழல் அவன் அடி நிழல் * தடம் அன்றி யாமே (2)

Pasuram 995 · corpus 3785

Pasuram 995

Study resources at Uveda
அன்றி யாம் ஒரு புகலிடம் * இலம் என்று என்று அலற்றி *
 நின்று நான்முகன் அரனொடு * தேவர்கள் நாட **
 வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் * திருமோகூர் *
 நன்று நாம் இனி நணுகுதும் * நமது இடர் கெடவே (3)

Pasuram 996 · corpus 3786

Pasuram 996

Study resources at Uveda
இடர் கெட எம்மைப் போந்து அளியாய் * என்று என்று ஏத்தி *
 சுடர் கொள் சோதியைத் * தேவரும் முனிவரும் தொடர **
 படர் கொள் பாம்பு அணைப் * பள்ளி கொள்வான் திருமோகூர் *
 இடர் கெட அடி பரவுதும் * தொண்டீர்! வம்மினே (4)

Pasuram 997 · corpus 3787

Pasuram 997

Study resources at Uveda
தொண்டீர் வம்மின் * நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் *
 அண்டம் மூவுலகு அளந்தவன் * அணி திருமோகூர் **
 எண் திசையும் ஈன் கரும்பொடு * பெரும் செந்நெல் விளைய *
 கொண்ட கோயிலை வலஞ்செய்து * இங்கு ஆடுதும் கூத்தே (5)

Pasuram 998 · corpus 3788

Pasuram 998

Study resources at Uveda
கூத்தன் கோவலன் * குதற்று வல் அசுரர்கள் கூற்றம் *
 ஏத்தும் நங்கட்கும் * அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் **
 வாய்த்த தண் பணை வள வயல் சூழ் * திருமோகூர்
 ஆத்தன் * தாமரை அடி அன்றி * மற்று இலம் அரணே (6)

Pasuram 999 · corpus 3789

Pasuram 999

Study resources at Uveda
மற்று இலம் அரண் * வான் பெரும் பாழ் தனி முதலா *
 சுற்றும் நீர் படைத்து * அதன் வழித் தொல் முனி முதலா **
 முற்றும் தேவரோடு * உலகுசெய்வான் திருமோகூர் *
 சுற்றி நாம் வலஞ் செய்ய * நம் துயர் கெடும் கடிதே (7)

Pasuram 1000 · corpus 3790

Pasuram 1000

Study resources at Uveda
துயர் கெடும் கடிது அடைந்து வந்து * அடியவர் தொழுமின் *
 உயர் கொள் சோலை * ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் **
 பெயர்கள் ஆயிரம் உடைய * வல் அரக்கர் புக்கு அழுந்த *
 தயரதன் பெற்ற * மரதக மணித் தடத்தினையே (8)

Pasuram 1001 · corpus 3791

Pasuram 1001

Study resources at Uveda
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் * பவளச் செவ்வாய் *
 அணிக் கொள் நால் தடம் தோள் * தெய்வம் அசுரரை என்றும் **
 துணிக்கும் வல் அரட்டன் * உறை பொழில் திருமோகூர் *
 நணித்து நம்முடை நல் அரண் * நாம் அடைந்தனமே (9)

Pasuram 1002 · corpus 3792

Pasuram 1002

Study resources at Uveda
நாம் அடைந்த நல் அரண் * நமக்கு என்று நல் அமரர் *
 தீமை செய்யும் வல் அசுரரை * அஞ்சிச் சென்று அடைந்தால் **
 காம ரூபம் கொண்டு * எழுந்து அளிப்பான் திருமோகூர் *
 நாமமே நவின்று எண்ணுமின் * ஏத்துமின் நமர்காள் (10)

Pasuram 1003 · corpus 3793

Pasuram 1003

Study resources at Uveda
ஏத்துமின் நமர்காள் * என்று தான் குடம் ஆடு
 கூத்தனை * குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் **
 வாய்த்த ஆயிரத்துள் இவை * வண் திருமோகூர்க்கு *
 ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு * இடர் கெடுமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.