Corpus pasurams 3794–3804

This page preserves the source-defined decade 10, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1004 · corpus 3794

Pasuram 1004

Study resources at Uveda
கெடும் இடர் ஆய எல்லாம் * கேசவா என்ன * நாளும்
 கொடுவினை செய்யும் * கூற்றின் தமர்களும் குறுககில்லார் **
 விடம் உடை அரவில் பள்ளி * விரும்பினான் சுரும்பு அலற்றும் *
 தடம் உடை வயல் * அனந்தபுரநகர் புகுதும் இன்றே (1)

Pasuram 1005 · corpus 3795

Pasuram 1005

Study resources at Uveda
இன்று போய்ப் புகுதிராகில் * எழுமையும் ஏதம் சாரா *
 குன்று நேர் மாடம் மாடே * குருந்து சேர் செருந்தி புன்னை **
 மன்று அலர் பொழில் * அனந்தபுரநகர் மாயன் நாமம் *
 ஒன்றும் ஓர் ஆயிரமாம் * உள்ளுவார்க்கு உம்பர் ஊரே (2)

Pasuram 1006 · corpus 3796

Pasuram 1006

Study resources at Uveda
ஊரும் புள் கொடியும் அஃதே * உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் *
 சேரும் தண் அனந்தபுர * சிக்கெனப் புகுதிராகில் **
 தீரும் நோய் வினைகள் எல்லாம் * திண்ணம் நாம் அறியச் சொன்னோம் *
 பேரும் ஓர் ஆயிரத்துள் * ஒன்று நீர் பேசுமினே (3)

Pasuram 1007 · corpus 3797

Pasuram 1007

Study resources at Uveda
பேசுமின் கூசம் இன்றிப் * பெரிய நீர் வேலை சூழ்ந்து *
 வாசமே கமழும் சோலை * வயல் அணி அனந்தபுரம் **
 நேசம் செய்து உறைகின்றானை * நெறிமையால் மலர்கள் தூவி *
 பூசனை செய்கின்றார்கள் * புண்ணியம் செய்தவாறே (4)

Pasuram 1008 · corpus 3798

Pasuram 1008

Study resources at Uveda
புண்ணியம் செய்து * நல்ல புனலொடு மலர்கள் தூவி *
 எண்ணுமின் எந்தை நாமம் * இப் பிறப்பு அறுக்கும் அப்பால் **
 திண்ணம் நாம் அறியச் சொன்னோம் * செறி பொழில் அனந்தபுரத்து *
 அண்ணலார் கமல பாதம் * அணுகுவார் அமரர் ஆவார் (5)

Pasuram 1009 · corpus 3799

Pasuram 1009

Study resources at Uveda
அமரராய்த் திரிகின்றார்கட்கு * ஆதி சேர் அனந்தபுரத்து *
 அமரர் கோன் அர்ச்சிக்கின்று * அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் **
 நமர்களோ சொல்லக் கேள்மின் * நாமும் போய் நணுகவேண்டும் *
 குமரனார் தாதை * துன்பம் துடைத்த கோவிந்தனாரே (6)

Pasuram 1010 · corpus 3800

Pasuram 1010

Study resources at Uveda
துடைத்த கோவிந்தனாரே * உலகு உயிர் தேவும் மற்றும் *
 படைத்த எம் பரம மூர்த்தி * பாம்பு அணைப் பள்ளி கொண்டான் **
 மடைத்தலை வாளை பாயும் * வயல் அணி அனந்தபுரம் *
 கடைத்தலை சீய்க்கப்பெற்றால் * கடுவினை களையலாமே (7)

Pasuram 1011 · corpus 3801

Pasuram 1011

Study resources at Uveda
கடுவினை களையலாகும் * காமனைப் பயந்த காளை *
 இடவகை கொண்டது என்பர் * எழில் அணி அனந்தபுரம் **
 படம் உடை அரவில் பள்ளி * பயின்றவன் பாதம் காண *
 நடமினோ நமர்கள் உள்ளீர்! * நாம் உமக்கு அறியச் சொன்னோம் (8)

Pasuram 1012 · corpus 3802

Pasuram 1012

Study resources at Uveda
நாம் உமக்கு அறியச் சொன்ன * நாள்களும் நணிய ஆன *
 சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் * செறி பொழில் அனந்தபுரம் **
 தூமம் நல் விரை மலர்கள் * துவள் அற ஆய்ந்துகொண்டு *
 வாமனன் அடிக்கு என்று ஏத்த * மாய்ந்து அறும் வினைகள் தாமே (9)

Pasuram 1013 · corpus 3803

Pasuram 1013

Study resources at Uveda
மாய்ந்து அறும் வினைகள் தாமே * மாதவா என்ன * நாளும்
 ஏய்ந்த பொன் மதிள் * அனந்தபுரநகர் எந்தைக்கு என்று **
 சாந்தொடு விளக்கம் தூபம் * தாமரை மலர்கள் நல்ல *
 ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் * அந்தம் இல் புகழினாரே (10)

Pasuram 1014 · corpus 3804

Pasuram 1014

Study resources at Uveda
அந்தம் இல் புகழ் * அனந்தபுரநகர் ஆதி தன்னை *
 கொந்து அலர் பொழில் * குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள் **
 ஐந்தினோடு ஐந்தும் வல்லார் * அணைவர் போய் அமர் உலகில் *
 பைந்தொடி மடந்தையர் தம் * வேய் மரு தோள் இணையே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.