Corpus pasurams 3772–3782

This page preserves the source-defined decade 9, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 982 · corpus 3772

Pasuram 982

Study resources at Uveda
மாலை நண்ணித் * தொழுது எழுமினோ வினை கெட *
 காலை மாலை * கமல மலர் இட்டு நீர் **
 வேலை மோதும் மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து *
 ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் * அடி இணைகளே (1)

Pasuram 983 · corpus 3773

Pasuram 983

Study resources at Uveda
கள் அவிழும் மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் *
 நள்ளி சேரும் வயல் சூழ் * கிடங்கின் புடை **
 வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் * திருக் கண்ணபுரம் *
 உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே (2)

Pasuram 984 · corpus 3774

Pasuram 984

Study resources at Uveda
தொண்டர் நும் தம் * துயர் போக நீர் ஏகமாய் *
 விண்டு வாடா மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் **
 வண்டு பாடும் பொழில் சூழ் * திருக்கண்ணபுரத்து
 அண்ட வாணன் * அமரர் பெருமானையே (3)

Pasuram 985 · corpus 3775

Pasuram 985

Study resources at Uveda
மானை நோக்கி * மடப் பின்னை தன் கேள்வனை *
 தேனை வாடா மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் **
 வானை உந்தும் மதிள் சூழ் * திருக்கண்ணபுரம் *
 தான் நயந்த பெருமான் * சரண் ஆகுமே (4)

Pasuram 986 · corpus 3776

Pasuram 986

Study resources at Uveda
சரணம் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
 மரணம் ஆனால் * வைகுந்தம் கொடுக்கும் பிரான் **
 அரண் அமைந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்
 தரணியாளன் * தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே (5)

Pasuram 987 · corpus 3777

Pasuram 987

Study resources at Uveda
அன்பன் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
 செம் பொன் ஆகத்து * அவுணன் உடல் கீண்டவன் **
 நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து
 அன்பன் * நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே (6)

Pasuram 988 · corpus 3778

Pasuram 988

Study resources at Uveda
மெய்யன் ஆகும் * விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் *
 பொய்யன் ஆகும் * புறமே தொழுவார்க்கு எல்லாம் **
 செய்யில் வாளை உகளும் * திருக்கண்ணபுரத்து
 ஐயன் * ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே (7)

Pasuram 989 · corpus 3779

Pasuram 989

Study resources at Uveda
அணியன் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
 பிணியும் சாரா * பிறவி கெடுத்து ஆளும் **
 மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணரம்
 பணிமின் * நாளும் பரமேட்டி தன் பாதமே (8)

Pasuram 990 · corpus 3780

Pasuram 990

Study resources at Uveda
பாதம் நாளும் * பணியத் தணியும் பிணி *
 ஏதம் சாரா * எனக்கேல் இனி என்குறை? **
 வேத நாவர் விரும்பும் * திருக்கண்ணபுரத்து
 ஆதியானை * அடைந்தார்க்கு அல்லல் இல்லையே (9)

Pasuram 991 · corpus 3781

Pasuram 991

Study resources at Uveda
இல்லை அல்லல் * எனக்கேல் இனி என் குறை? *
 அல்லி மாதர் அமரும் * திருமார்பினன் **
 கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரம்
 சொல்ல * நாளும் துயர் பாடு சாராவே (10)

Pasuram 992 · corpus 3782

Pasuram 992

Study resources at Uveda
பாடு சாரா * வினை பற்று அற வேண்டுவீர் *
 மாடம் நீடு * குருகூர்ச் சடகோபன் ** சொல்
 பாடலான தமிழ் * ஆயிரத்துள் இப்பத்தும்
 பாடி ஆடி * பணிமின் அவன் தாள்களே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.