Corpus pasurams 3816–3826

This page preserves the source-defined decade 10, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1026 · corpus 3816

Pasuram 1026

Study resources at Uveda
சார்வே தவநெறிக்குத் * தாமோதரன் தாள்கள் *
 கார் மேக வண்ணன் * கமல நயனத்தன் **
 நீர் வானம் மண் எரி கால் ஆய் * நின்ற நேமியான் *
 பேர் வானவர்கள் * பிதற்றும் பெருமையனே (1)

Pasuram 1027 · corpus 3817

Pasuram 1027

Study resources at Uveda
பெருமையனே வானத்து இமையோர்க்கும் * காண்டற்கு
 அருமையனே * ஆகத்து அணையாதார்க்கு * என்றும்
 திரு மெய் உறைகின்ற * செங்கண் மால் * நாளும்
 இருமை வினை கடிந்து * இங்கு என்னை ஆள்கின்றானே (2)

Pasuram 1028 · corpus 3818

Pasuram 1028

Study resources at Uveda
ஆள்கின்றான் ஆழியான் * ஆரால் குறைவு உடையம்? *
 மீள்கின்றது இல்லைப் * பிறவித் துயர் கடிந்தோம் **
 வாள் கெண்டை ஒண்கண் * மடப் பின்னை தன் கேள்வன் *
 தாள் கண்டு கொண்டு * என் தலைமேல் புனைந்தேனே (3)

Pasuram 1029 · corpus 3819

Pasuram 1029

Study resources at Uveda
தலைமேல் புனைந்தேன் * சரணங்கள் * ஆலின்
 இலைமேல் துயின்றான் * இமையோர் வணங்க **
 மலைமேல் தான் நின்று * என் மனத்துள் இருந்தானை *
 நிலை பேர்க்கல் ஆகாமை * நிச்சித்து இருந்தேனே (4)

Pasuram 1030 · corpus 3820

Pasuram 1030

Study resources at Uveda
நிச்சித்து இருந்தேன் * என் நெஞ்சம் கழியாமை *
 கைச் சக்கரத்து அண்ணல் * கள்வம் பெரிது உடையன் **
 மெச்சப்படான் பிறர்க்கு * மெய் போலும் பொய் வல்லன் *
 நச்சப்படும் நமக்கு * நாகத்து அணையானே (5)

Pasuram 1031 · corpus 3821

Pasuram 1031

Study resources at Uveda
நாகத்து அணையானை * நாள்தோறும் ஞானத்தால் *
 ஆகத்து அணைப்பார்க்கு * அருள்செய்யும் அம்மானை **
 மாகத்து இள மதியம் * சேரும் சடையானை *
 பாகத்து வைத்தான் தன் * பாதம் பணிந்தேனே (6)

Pasuram 1032 · corpus 3822

Pasuram 1032

Study resources at Uveda
பணி நெஞ்சே நாளும் * பரம பரம்பரனை *
 பிணி ஒன்றும் சாரா * பிறவி கெடுத்து ஆளும் **
 மணி நின்ற சோதி * மதுசூதன் என் அம்மான் *
 அணி நின்ற செம்பொன் * அடல் ஆழியானே (7)

Pasuram 1033 · corpus 3823

Pasuram 1033

Study resources at Uveda
ஆழியான் ஆழி * அமரர்க்கும் அப்பாலான் *
 ஊழியான் ஊழி படைத்தான் * நிரை மேய்த்தான் **
 பாழி அம் தோளால் * வரை எடுத்தான் பாதங்கள் *
 வாழி என் நெஞ்சே! * மறவாது வாழ்கண்டாய் (8)

Pasuram 1034 · corpus 3824

Pasuram 1034

Study resources at Uveda
கண்டேன் கமல மலர்ப் பாதம் * காண்டலுமே *
 விண்டே ஒழிந்த * வினையாயின எல்லாம் **
 தொண்டே செய்து என்றும் * தொழுது வழியொழுக *
 பண்டே பரமன் பணித்த * பணிவகையே (9)

Pasuram 1035 · corpus 3825

Pasuram 1035

Study resources at Uveda
வகையால் மனம் ஒன்றி * மாதவனை * நாளும்
 புகையால் விளக்கால் * புது மலரால் நீரால் **
 திசைதோறு அமரர்கள் * சென்று இறைஞ்ச நின்ற *
 தகையான் சரணம் * தமர்கட்கு ஓர் பற்றே (10)

Pasuram 1036 · corpus 3826

Pasuram 1036

Study resources at Uveda
பற்று என்று பற்றி ப * ரம பரம்பரனை *
 மல் திண் தோள் மாலை * வழுதி வளநாடன் **
 சொல் தொடை அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
 கற்றார்க்கு ஓர் பற்றாகும் * கண்ணன் கழல் இணையே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.