Corpus pasurams 3827–3837

This page preserves the source-defined decade 10, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1037 · corpus 3827

Pasuram 1037

Study resources at Uveda
கண்ணன் கழல் இணை *
 நண்ணும் மனம் உடையீர் **
 எண்ணும் திருநாமம் *
 திண்ணம் நாரணமே (1)

Pasuram 1038 · corpus 3828

Pasuram 1038

Study resources at Uveda
நாரணன் எம்மான் *
 பார் அணங்கு ஆளன் **
 வாரணம் தொலைத்த *
 காரணன் தானே (2)

Pasuram 1039 · corpus 3829

Pasuram 1039

Study resources at Uveda
தானே உலகு எல்லாம் *
 தானே படைத்து இடந்து **
 தானே உண்டு உமிழ்ந்து *
 தானே ஆள்வானே (3)

Pasuram 1040 · corpus 3830

Pasuram 1040

Study resources at Uveda
ஆள்வான் ஆழி நீர் *
 கோள்வாய் அரவு அணையான் **
 தாள்வாய் மலர் இட்டு *
 நாள்வாய் நாடீரே (4)

Pasuram 1041 · corpus 3831

Pasuram 1041

Study resources at Uveda
நாடீர் நாள்தோறும் *
 வாடா மலர்கொண்டு **
 பாடீர் அவன் நாமம் *
 வீடே பெறலாமே (5)

Pasuram 1042 · corpus 3832

Pasuram 1042

Study resources at Uveda
மேயான் வேங்கடம் *
 காயாமலர் வண்ணன் **
 பேயார் முலை உண்ட *
 வாயான் மாதவனே (6)

Pasuram 1043 · corpus 3833

Pasuram 1043

Study resources at Uveda
மாதவன் என்று என்று *
 ஓத வல்லீரேல் **
 தீது ஒன்றும் அடையா *
 ஏதம் சாராவே (7)

Pasuram 1044 · corpus 3834

Pasuram 1044

Study resources at Uveda
சாரா ஏதங்கள் *
 நீர் ஆர் முகில் வண்ணன் **
 பேர் ஆர் ஓதுவார் *
 ஆரார் அமரரே (8)

Pasuram 1045 · corpus 3835

Pasuram 1045

Study resources at Uveda
அமரர்க்கு அரியானை *
 தமர்கட்கு எளியானை **
 அமரத் தொழுவார்கட்கு *
 அமரா வினைகளே (9)

Pasuram 1046 · corpus 3836

Pasuram 1046

Study resources at Uveda
வினை வல் இருள் என்னும் *
 முனைகள் வெருவிப் போம் **
 சுனை நல் மலர் இட்டு *
 நினைமின் நெடியானே (10)

Pasuram 1047 · corpus 3837

Pasuram 1047

Study resources at Uveda
நெடியான் அருள் சூடும் *
 படியான் சடகோபன் **
 நொடி ஆயிரத்து இப் பத்து *
 அடியார்க்கு அருள்பேறே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.