Corpus pasurams 3838–3848

This page preserves the source-defined decade 10, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1048 · corpus 3838

Pasuram 1048

Study resources at Uveda
அருள்பெறுவார் அடியார் தம் * அடியனேற்கு * ஆழியான்
 அருள்தருவான் அமைகின்றான் * அது நமது விதிவகையே **
 இருள் தரு மா ஞாலத்துள் * இனிப் பிறவி யான் வேண்டேன் *
 மருள் ஒழி நீ மட நெஞ்சே * வாட்டாற்றான் அடி வணங்கே (1)

Pasuram 1049 · corpus 3839

Pasuram 1049

Study resources at Uveda
வாட்டாற்றான் அடி வணங்கி * மா ஞாலப் பிறப்பு அறுப்பான் *
 கேட்டாயே மட நெஞ்சே! * கேசவன் எம் பெருமானை **
 பாட்டு ஆய பல பாடிப் * பழவினைகள் பற்று அறுத்து *
 நாட்டாரோடு இயல்வு ஒழிந்து * நாரணனை நண்ணினமே (2)

Pasuram 1050 · corpus 3840

Pasuram 1050

Study resources at Uveda
நண்ணினம் நாராயணனை * நாமங்கள் பல சொல்லி *
 மண் உலகில் வளம் மிக்க * வாட்டாற்றான் வந்து இன்று **
 விண் உலகம் தருவானாய் * விரைகின்றான் விதிவகையே *
 எண்ணினவாறு ஆகா * இக் கருமங்கள் என் நெஞ்சே (3)

Pasuram 1051 · corpus 3841

Pasuram 1051

Study resources at Uveda
என் நெஞ்சத்து உள் இருந்து * இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து *
 வல் நெஞ்சத்து இரணியனை * மார்வு இடந்த வாட்டாற்றான் **
 மன் அஞ்ச பாரதத்துப் * பாண்டவர்க்காப் படைதொட்டான் *
 நல் நெஞ்சே நம் பெருமான் * நமக்கு அருள் தான் செய்வானே (4)

Pasuram 1052 · corpus 3842

Pasuram 1052

Study resources at Uveda
வான் ஏற வழி தந்த * வாட்டாற்றான் பணிவகையே *
 நான் ஏறப் பெறுகின்றேன் * நரகத்தை நகு நெஞ்சே! **
 தேன் ஏறு மலர்த் துளவம் * திகழ் பாதன் * செழும் பறவை
 தான் ஏறித் திரிவான * தாளிணை என் தலைமேலே (5)

Pasuram 1053 · corpus 3843

Pasuram 1053

Study resources at Uveda
தலைமேல தாள் இணைகள் * தாமரைக்கண் என் அம்மான் *
 நிலைபேரான் என் நெஞ்சத்து * எப்பொழுதும் எம் பெருமான் **
 மலை மாடத்து அரவு அணைமேல் * வாட்டாற்றான் மதம் மிக்க *
 கொலை யானை மருப்பு ஒசித்தான் * குரை கழல்கள் குறுகினமே (6)

Pasuram 1054 · corpus 3844

Pasuram 1054

Study resources at Uveda
குரை கழல்கள் குறுகினம் * நம் கோவிந்தன் குடிகொண்டான் *
 திரை குழுவு கடல் புடை சூழ் * தென் நாட்டுத் திலதம் அன்ன **
 வரை குழுவு மணி மாட * வாட்டாற்றான் மலர் அடிமேல் *
 விரை குழுவு நறும் துளவம் * மெய்ந்நின்று கமழுமே (7)

Pasuram 1055 · corpus 3845

Pasuram 1055

Study resources at Uveda
மெய்ந்நின்று கமழ் துளவ * விரை ஏறு திருமுடியன் *
 கைந்நின்ற சக்கரத்தன் * கருதும் இடம் பொருது புனல் **
 மைந்நின்ற வரை போலும் * திரு உருவ வாட்டாற்றாற்கு *
 எந் நன்றி செய்தேனா * என் நெஞ்சில் திகழ்வதுவே? (8)

Pasuram 1056 · corpus 3846

Pasuram 1056

Study resources at Uveda
திகழ்கின்ற திருமார்பில் * திருமங்கை தன்னோடும் *
 திகழ்கின்ற திருமாலார் * சேர்விடம் தண் வாட்டாறு **
 புகழ்நின்ற புள் ஊர்தி * போர் அரக்கர் குலம் கெடுத்தான் *
 இகழ்வு இன்றி என் நெஞ்சத்து * எப்பொழுதும் பிரியானே (9)

Pasuram 1057 · corpus 3847

Pasuram 1057

Study resources at Uveda
பிரியாது ஆட்செய் என்று * பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான் *
 அரி ஆகி இரணியனை * ஆகம் கீண்டான் அன்று **
 பெரியார்க்கு ஆட்பட்டக்கால் * பெறாத பயன் பெறுமாறு *
 வரி வாள் வாய் அரவு அணைமேல்! * வாட்டாற்றான் காட்டினனே (10)

Pasuram 1058 · corpus 3848

Pasuram 1058

Study resources at Uveda
காட்டித் தன் கனை கழல்கள் * கடு நரகம் புகல் ஒழித்த *
 வாட்டாற்று எம் பெருமானை * வளங் குருகூர்ச் சடகோபன் **
 பாட்டாய தமிழ் மாலை * ஆயிரத்துள் இப் பத்தும்
 கேட்டு * ஆரார் வானவர்கள் * செவிக்கு இனிய செஞ்சொல்லே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.