Corpus pasurams 3849–3859

This page preserves the source-defined decade 10, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1059 · corpus 3849

Pasuram 1059

Study resources at Uveda
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் * திருமாலிருஞ்சோலை *
 வஞ்சக் கள்வன் மா மாயன் * மாயக் கவியாய் வந்து ** என்
 நெஞ்சும் உயிரும் உள் கலந்து * நின்றார் அறியாவண்ணம் * என்
 நெஞ்சும் உயிரும் அவை உண்டு * தானே ஆகி நிறைந்தானே (1)

Pasuram 1060 · corpus 3850

Pasuram 1060

Study resources at Uveda
தானே ஆகி நிறைந்து * எல்லா உலகும் உயிரும் தானே ஆய் *
 தானே யான் என்பான் ஆகித் * தன்னைத் தானே துதித்து ** எனக்குத்
 தேனே பாலே கன்னலே அமுதே * திருமாலிருஞ்சோலை *
 கோனே ஆகி நின்றொழிந்தான் * என்னை முற்றும் உயிர் உண்டே (2)

Pasuram 1061 · corpus 3851

Pasuram 1061

Study resources at Uveda
என்னை முற்றும் உயிர் உண்டு * என் மாய ஆக்கை இதனுள் புக்கு *
 என்னை முற்றும் தானே ஆய் * நின்ற மாய அம்மான் சேர் **
 தென் நன் திருமாலிருஞ்சோலைத் * திசை கைகூப்பிச் சேர்ந்த யான் *
 இன்னும் போவேனேகொலோ? * என்கொல் அம்மான் திரு அருளே? (3)

Pasuram 1062 · corpus 3852

Pasuram 1062

Study resources at Uveda
என்கொல் அம்மான் திரு அருள்கள் * உலகும் உயிரும் தானே ஆய் *
 நன்கு என் உடலம் கைவிடான் * ஞாலத்தூடே நடந்து உழக்கி **
 தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற * திருமாலிருஞ்சோலை *
 நங்கள் குன்றம் கைவிடான் * நண்ணா அசுரர் நலியவே? (4)

Pasuram 1063 · corpus 3853

Pasuram 1063

Study resources at Uveda
நண்ணா அசுரர் நலிவு எய்த * நல்ல அமரர் பொலிவு எய்த *
 எண்ணாதனகள் எண்ணும் * நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப **
 பண் ஆர் பாடல் இன் கவிகள் * யானாய்த் தன்னைத் தான் பாடி *
 தென்னா என்னும் என் அம்மான் * திருமாலிருஞ்சோலையானே (5)

Pasuram 1064 · corpus 3854

Pasuram 1064

Study resources at Uveda
திருமாலிருஞ்சோலையானே ஆகிச் * செழு மூவுலகும் * தன்
 ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து * ஊழி ஊழி தலையளிக்கும் **
 திருமால் என்னை ஆளும் மால் * சிவனும் பிரமனும் காணாது *
 அரு மால் எய்தி அடி பரவ * அருளை ஈந்த அம்மானே (6)

Pasuram 1065 · corpus 3855

Pasuram 1065

Study resources at Uveda
அருளை ஈ என் அம்மானே! என்னும் * முக்கண் அம்மானும் *
 தெருள் கொள் பிரமன் அம்மானும் * தேவர் கோனும் தேவரும் **
 இருள்கள் கடியும் முனிவரும் * ஏத்தும் அம்மான் திருமலை *
 மருள்கள் கடியும் மணிமலை * திருமாலிருஞ்சோலை மலையே (7)

Pasuram 1066 · corpus 3856

Pasuram 1066

Study resources at Uveda
திருமாலிருஞ்சோலை மலையே * திருப்பாற்கடலே என் தலையே *
 திருமால் வைகுந்தமே * தண் திருவேங்கடமே எனது உடலே **
 அரு மா மாயத்து எனது உயிரே * மனமே வாக்கே கருமமே *
 ஒரு மா நொடியும் பிரியான் * என் ஊழி முதல்வன் ஒருவனே (8)

Pasuram 1067 · corpus 3857

Pasuram 1067

Study resources at Uveda
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் * ஒருவன் உலகு எல்லாம் *
 ஊழிதோறும் தன்னுள்ளே படைத்துக் * காத்துக் கெடுத்து உழலும் **
 ஆழிவண்ணன் என் அம்மான் * அம் தண் திருமாலிருஞ்சோலை *
 வாழி மனமே! கைவிடேல்! * உடலும் உயிரும் மங்க ஒட்டே (9)

Pasuram 1068 · corpus 3858

Pasuram 1068

Study resources at Uveda
மங்க ஒட்டு உன் மா மாயை * திருமாலிருஞ்சோலை மேய *
 நங்கள் கோனே யானே நீ ஆகி * என்னை அளித்தானே **
 பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் * கருமேந்திரியம் ஐம்பூதம் *
 இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி * மான் ஆங்காரம் மனங்களே (10)

Pasuram 1069 · corpus 3859

Pasuram 1069

Study resources at Uveda
மான் ஆங்காரம் மனம் கெட * ஐவர் வன்கையர் மங்க *
 தான் ஆங்காரமாய்ப் புக்கு * தானே தானே ஆனானை **
 தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் * சடகோபன் சொல் ஆயிரத்துள் *
 மான் ஆங்காரத்து இவை பத்தும் * திருமாலிருஞ்சோலை மலைக்கே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.