Pasuram 1070 · corpus 3860
Pasuram 1070
திருமாலிருஞ்சோலை மலை * என்றேன் என்ன *
திருமால் வந்து * என் நெஞ்சு நிறையப் புகுந்தான் **
குரு மா மணி உந்து புனல் * பொன்னித் தென்பால் *
திருமால் சென்று சேர்விடம் * தென் திருப்பேரே (1)
Nammazhvar · Pasurams 1070–1080
Corpus pasurams 3860–3870
This page preserves the source-defined decade 10, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1070 · corpus 3860
திருமாலிருஞ்சோலை மலை * என்றேன் என்ன *
திருமால் வந்து * என் நெஞ்சு நிறையப் புகுந்தான் **
குரு மா மணி உந்து புனல் * பொன்னித் தென்பால் *
திருமால் சென்று சேர்விடம் * தென் திருப்பேரே (1)
Pasuram 1071 · corpus 3861
பேரே உறைகின்ற பிரான் * இன்று வந்து *
பேரேன் என்று * என் நெஞ்சு நிறையப் புகுந்தான் **
கார் ஏழ் கடல் ஏழ் * மலை ஏழ் உலகு உண்டும் *
ஆரா வயிற்றானை * அடங்கப் பிடித்தேனே (2)
Pasuram 1072 · corpus 3862
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் * பிணி சாரேன் *
மடித்தேன் மனை வாழ்க்கையுள் * நிற்பது ஓர் மாயையை **
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
அடிச் சேர்வது எனக்கு * எளிது ஆயினவாறே (3)
Pasuram 1073 · corpus 3863
எளிதாயினவாறு என்று * என் கண்கள் களிப்பக் *
களிது ஆகிய சிந்தையனாய்க் * களிக்கின்றேன் **
கிளி தாவிய சோலைகள் சூழ் * திருப்பேரான் *
தெளிது ஆகிய * சேண் விசும்பு தருவானே (4)
Pasuram 1074 · corpus 3864
வானே தருவான் * எனக்கா என்னோடு ஒட்டி *
ஊன் ஏய் குரம்பை * இதனுள் புகுந்து ** இன்று
தானே தடுமாற்ற * வினைகள் தவிர்த்தான் *
தேன் ஏய் பொழில் * தென் திருப்பேர் நகரானே (5)
Pasuram 1075 · corpus 3865
திருப்பேர் நகரான் * திருமாலிருஞ்சோலை *
பொருப்பே உறைகின்ற பிரான் * இன்று வந்து **
இருப்பேன் என்று * என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று * அமுதம் உண்டு களித்தேனே (6)
Pasuram 1076 · corpus 3866
உண்டு களித்தேற்கு * உம்பர் என் குறை * மேலைத்
தொண்டு உகளித்து * அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் **
வண்டு களிக்கும் பொழில் சூழ் * திருப்பேரான் *
கண்டு களிப்ப * கண்ணுள் நின்று அகலானே? (7)
Pasuram 1077 · corpus 3867
கண்ணுள் நின்று அகலான் * கருத்தின்கண் பெரியன் *
எண்ணில் நுண் பொருள் * ஏழ் இசையின் சுவை தானே **
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
திண்ணம் என் மனத்துப் * புகுந்தான் செறிந்து இன்றே (8)
Pasuram 1078 · corpus 3868
இன்று என்னைப் பொருளாக்கித் * தன்னை என்னுள் வைத்தான் *
அன்று என்னைப் புறம்போகப் * புணர்த்தது என் செய்வான்? **
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் * திருப்பேரான் *
ஒன்று எனக்கு அருள் செய்ய * உணர்த்தல் உற்றேனே (9)
Pasuram 1079 · corpus 3869
உற்றேன் உகந்து பணிசெய்து * உன பாதம்
பெற்றேன் * ஈதே இன்னம் * வேண்டுவது எந்தாய் **
கற்றார் மறைவாணர்கள் * வாழ் திருப்பேராற்கு *
அற்றார் அடியார் தமக்கு * அல்லல் நில்லாவே (10)
Pasuram 1080 · corpus 3870
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல் *
நல்லார் பலர் வாழ் * குருகூர்ச் சடகோபன் **
சொல் ஆர் தமிழ் * ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் * தொண்டர் ஆள்வது * சூழ் பொன் விசும்பே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.