Pasuram 122 · corpus 2912
Pasuram 122
திண்ணன் வீடு * முதல் முழுதும் ஆய் *
எண்ணின் மீதியன் * எம் பெருமான் **
மண்ணும் விண்ணும் * எல்லாம் உடன் உண்ட நம் *
கண்ணன் கண் அல்லது * இல்லை ஓர் கண்ணே (1)
Nammazhvar · Pasurams 122–132
Corpus pasurams 2912–2922
This page preserves the source-defined decade 2, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 122 · corpus 2912
திண்ணன் வீடு * முதல் முழுதும் ஆய் *
எண்ணின் மீதியன் * எம் பெருமான் **
மண்ணும் விண்ணும் * எல்லாம் உடன் உண்ட நம் *
கண்ணன் கண் அல்லது * இல்லை ஓர் கண்ணே (1)
Pasuram 123 · corpus 2913
ஏ பாவம் !பரமே ! * ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து * அருளால் அளிப்பார் ஆர் **
மா பாவம் விட * அரற்குப் பிச்சை பெய் *
கோபால கோளரி * ஏறு அன்றியே? (2)
Pasuram 124 · corpus 2914
ஏறனைப் பூவனைப் * பூமகள் தன்னை *
வேறுஇன்றி விண் தொழத் * தன்னுள் வைத்து **
மேல் தன்னை மீதிட * நிமிர்ந்து மண் கொண்ட *
மால் தனில் மிக்கும் * ஓர் தேவும் உளதே? (3)
Pasuram 125 · corpus 2915
தேவும் எப் பொருளும் படைக்க *
பூவில் நான்முகனைப் படைத்த **
தேவன் எம் பெருமானுக்கு அல்லால் *
பூவும் பூசனையும் தகுமே? (4)
Pasuram 126 · corpus 2916
தகும் சீர்த் * தன் தனி முதலினுள்ளே *
மிகும் தேவும் * எப் பொருளும் படைக்க **
தகும் கோலத் * தாமரைக் கண்ணன் எம்மான் *
மிகும் சோதி * மேல் அறிவார் எவரே? (5)
Pasuram 127 · corpus 2917
எவரும் யாவையும் * எல்லாப் பொருளும் *
கவர்வு இன்றித் * தன்னுள் ஒடுங்க நின்ற **
பவர் கொள் ஞான * வெள்ளச் சுடர் மூர்த்தி *
அவர் எம் ஆழி * அம் பள்ளியாரே (6)
Pasuram 128 · corpus 2918
பள்ளி ஆல் இலை * ஏழ் உலகும் கொள்ளும் *
வள்ளல் * வல் வயிற்றுப் பெருமான் **
உள் உள் ஆர் * அறிவார் அவன் தன் *
கள்ள மாய மனக்கருத்தே? (7)
Pasuram 129 · corpus 2919
கருத்தில் தேவும் * எல்லாப் பொருளும் *
வருத்தித்த * மாயப் பிரான் அன்றி யாரே **
திருத்தித் * திண் நிலை மூவுலகும் தம்முள் *
இருத்திக் காக்கும் * இயல்வினரே? (8)
Pasuram 130 · corpus 2920
காக்கும் இயல்வினன் * கண்ண பெருமான் *
சேர்க்கை செய்து * தன் உந்தியுள்ளே **
வாய்த்த திசைமுகன் * இந்திரன் வானவர் *
ஆக்கினான் * தெய்வ உலகுகளே (9)
Pasuram 131 · corpus 2921
கள்வா! எம்மையும் * ஏழ் உலகும் * நின்
உள்ளே தோற்றிய * இறைவ என்று **
வெள் ஏறன் நான்முகன் * இந்திரன் வானவர் *
புள் ஊர்தி கழல் * பணிந்து ஏத்துவரே (10)
Pasuram 132 · corpus 2922
ஏத்த ஏழ் உலகும் * கொண்ட கோலக்
கூத்தனைக் * குருகூர்ச் சடகோபன் சொல் **
வாய்த்த ஆயிரத்துள் * இவை பத்துடன் *
ஏத்த வல்லவர்க்கு * இல்லை ஓர் ஊனமே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.