Corpus pasurams 3002–3012

This page preserves the source-defined decade 2, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 212 · corpus 3002

Pasuram 212

Study resources at Uveda
கிளர் ஒளி இளமை * கெடுவதன் முன்னம் *
 வளர் ஒளி மாயோன் * மருவிய கோயில் **
 வளர் இளம் பொழில் சூழ் * மாலிருஞ்சோலை *
 தளர்வு இலர் ஆகில் * சார்வது சதிரே (1)

Pasuram 213 · corpus 3003

Pasuram 213

Study resources at Uveda
சதிர் இள மடவார் * தாழ்ச்சியை மதியாது *
 அதிர் குரல் சங்கத்து * அழகர் தம் கோயில் **
 மதி தவழ் குடுமி * மாலிருஞ்சோலை *
 பதியது ஏத்தி * எழுவது பயனே (2)

Pasuram 214 · corpus 3004

Pasuram 214

Study resources at Uveda
பயன் அல்ல செய்து * பயன் இல்லை நெஞ்சே *
 புயல் மழை வண்ணர் * புரிந்து உறை கோயில் **
 மயல் மிகு பொழில் சூழ் * மாலிருஞ்சோலை *
 அயன்மலை அடைவது * அது கருமமே (3)

Pasuram 215 · corpus 3005

Pasuram 215

Study resources at Uveda
கரும வன் பாசம் * கழித்து உழன்று உய்யவே *
 பெருமலை எடுத்தான் * பீடு உறை கோயில் **
 வரு மழை தவழும் * மாலிருஞ்சோலை *
 திருமலை அதுவே * அடைவது திறமே (4)

Pasuram 216 · corpus 3006

Pasuram 216

Study resources at Uveda
திறம் உடை வலத்தால் * தீவினை பெருக்காது *
 அறம் முயல் ஆழிப் * படையவன் கோயில் **
 மறு இல் வண் சுனை சூழ் * மாலிருஞ்சோலை *
 புறமலை சாரப் * போவது கிறியே (5)

Pasuram 217 · corpus 3007

Pasuram 217

Study resources at Uveda
கிறி என நினைமின் * கீழ்மை செய்யாதே *
 உறி அமர் வெண்ணெய் * உண்டவன் கோயில் **
 மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
 நெறி பட அதுவே * நினைவது நலமே (6)

Pasuram 218 · corpus 3008

Pasuram 218

Study resources at Uveda
நலம் என நினைமின் * நரகு அழுந்தாதே *
 நிலம் முனம் இடந்தான் * நீடு உறை கோயில் **
 மலம் அறு மதி சேர் * மாலிருஞ்சோலை *
 வலம் முறை எய்தி * மருவுதல் வலமே (7)

Pasuram 219 · corpus 3009

Pasuram 219

Study resources at Uveda
வலஞ்செய்து வைகல் * வலம் கழியாதே *
 வலஞ்செய்யும் ஆய * மாயவன் கோயில் **
 வலஞ்செய்யும் வானோர் * மாலிருஞ்சோலை *
 வலஞ்செய்து நாளும் * மருவுதல் வழக்கே (8)

Pasuram 220 · corpus 3010

Pasuram 220

Study resources at Uveda
வழக்கு என நினைமின் * வல்வினை மூழ்காது *
 அழக்கொடி அட்டான் * அமர் பெருங்கோயில் **
 மழக் களிற்று இனம் சேர் * மாலிருஞ்சோலை *
 தொழக் கருதுவதே * துணிவது சூதே (9)

Pasuram 221 · corpus 3011

Pasuram 221

Study resources at Uveda
சூது என்று களவும் * சூதும் செய்யாதே *
 வேதம் முன் விரித்தான் * விரும்பிய கோயில் **
 மாது உறு மயில் சேர் * மாலிருஞ்சோலை *
 போது அவிழ் மலையே * புகுவது பொருளே (10)

Pasuram 222 · corpus 3012

Pasuram 222

Study resources at Uveda
பொருள் என்று இவ் உலகம் * படைத்தவன் புகழ்மேல் *
 மருள் இல் வண் குருகூர் * வண் சடகோபன் **
 தெருள் கொள்ளச் சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்து *
 அருளுடையவன் தாள் * அணைவிக்கும் முடித்தே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.