Pasuram 223 · corpus 3013
Pasuram 223
முடிச் சோதியாய் * உனது முகச் சோதி மலர்ந்ததுவோ? *
அடிச் சோதி நீ நின்ற * தாமரையாய் அலர்ந்ததுவோ? **
படிச் சோதி ஆடையொடும் * பல் கலனாய் * நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? * திருமாலே கட்டுரையே (1)
Nammazhvar · Pasurams 223–233
Corpus pasurams 3013–3023
This page preserves the source-defined decade 3, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 223 · corpus 3013
முடிச் சோதியாய் * உனது முகச் சோதி மலர்ந்ததுவோ? *
அடிச் சோதி நீ நின்ற * தாமரையாய் அலர்ந்ததுவோ? **
படிச் சோதி ஆடையொடும் * பல் கலனாய் * நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? * திருமாலே கட்டுரையே (1)
Pasuram 224 · corpus 3014
கட்டுரைக்கில் தாமரை * நின் கண் பாதம் கை ஒவ்வா *
சுட்டு உரைத்த நன் பொன் * உன் திருமேனி ஒளி ஒவ்வாது **
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் * புகழ்வு எல்லாம் பெரும்பாலும் *
பட்டுரையாய் புற்கு என்றே * காட்டுமால் பரஞ்சோதீ (2)
Pasuram 225 · corpus 3015
பரஞ்சோதி நீ பரமாய் * நின் இகழ்ந்து பின் * மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் * படி ஓவி நிகழ்கின்ற **
பரஞ்சோதி நின்னுள்ளே * படர் உலகம் படைத்த * எம்
பரஞ்சோதி கோவிந்தா * பண்பு உரைக்கமாட்டேனே (3)
Pasuram 226 · corpus 3016
மாட்டாதே ஆகிலும் * இம் மலர் தலை மா ஞாலம் *
நின் மாட்டு ஆய மலர் புரையும் * திருவுருவம் மனம் வைக்க **
மாட்டாத பல சமய * மதி கொடுத்தாய் * மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் * மா ஞாலம் வருந்தாதே? (4)
Pasuram 227 · corpus 3017
வருந்தாத அரும் தவத்த * மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் *
வருந்தாத ஞானம் ஆய் * வரம்பு இன்றி முழுது இயன்றாய் **
வரும் காலம் நிகழ் காலம் * கழி காலம் * ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் * எங்கு உலக்க ஓதுவனே? (5)
Pasuram 228 · corpus 3018
ஓதுவார் ஓத்து எல்லாம் * எவ் உலகத்து எவ் எவையும் *
சாதுவாய் நின் புகழின் * தகை அல்லால் பிறிது இல்லை **
போது வாழ் புனம் துழாய் * முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் * என் சொல்லி யான் வாழ்த்துவனே? (6)
Pasuram 229 · corpus 3019
வாழ்த்துவார் பலர் ஆக * நின்னுள்ளே நான்முகனை *
மூழ்த்த நீர் உலகு எல்லாம் * படை என்று முதல் படைத்தாய் **
கேழ்த்த சீர் அரன் முதலாக் * கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து *
சூழ்த்து அமரர் துதித்தால் * உன் தொல் புகழ் மாசூணாதே? (7)
Pasuram 230 · corpus 3020
மாசூணாச் சுடர் உடம்புஆய் * மலராது குவியாது *
மாசூணா ஞானம் ஆய் * முழுதும் ஆய் முழுது இயன்றாய் **
மாசூணா வான் கோலத்து * அமரர் கோன் வழிப்பட்டால் *
மாசூணா உன பாத * மலர்ச் சோதி மழுங்காதே? (8)
Pasuram 231 · corpus 3021
மழுங்காத வைந் நுதிய * சக்கர நல் வலத்தையாய் *
தொழும் காதல் களிறு அளிப்பான் * புள் ஊர்ந்து தோன்றினையே **
மழுங்காத ஞானமே படை * ஆக மலர் உலகில் *
தொழும்பாயார்க்கு அளித்தால் * உன் சுடர்ச் சோதி மறையாதே? (9)
Pasuram 232 · corpus 3022
மறை ஆய நால் வேதத்துள் நின்ற * மலர்ச் சுடரே *
முறையால் இவ் உலகு எல்லாம் * படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் **
பிறை ஏறு சடையானும் * நான்முகனும் இந்திரனும் *
இறை ஆதல் அறிந்து ஏத்த * வீற்றிருத்தல் இது வியப்பே? (10)
Pasuram 233 · corpus 3023
வியப்பு ஆய வியப்பு இல்லா * மெய்ஞ் ஞான வேதியனை *
சயப் புகழார் பலர் வாழும் * தடம் குருகூர்ச் சடகோபன் **
துயக்கு இன்றித் தொழுது உரைத்த * ஆயிரத்துள் இப் பத்தும் *
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் * ஒலி முந்நீர் ஞாலத்தே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.