Pasuram 201 · corpus 2991
Pasuram 201
எம் மா வீட்டுத் * திறமும் செப்பம் * நின்
செம் மா பாத பற்புத் * தலை சேர்த்து ** ஒல்லை
கைம்மா துன்பம் * கடிந்த பிரானே *
அம்மா அடியேன் * வேண்டுவது ஈதே (1)
Nammazhvar · Pasurams 201–211
Corpus pasurams 2991–3001
This page preserves the source-defined decade 2, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 201 · corpus 2991
எம் மா வீட்டுத் * திறமும் செப்பம் * நின்
செம் மா பாத பற்புத் * தலை சேர்த்து ** ஒல்லை
கைம்மா துன்பம் * கடிந்த பிரானே *
அம்மா அடியேன் * வேண்டுவது ஈதே (1)
Pasuram 202 · corpus 2992
ஈதே யான் உன்னைக் * கொள்வது எஞ்ஞான்றும் * என்
மை தோய் சோதி * மணிவண்ண எந்தாய் **
எய்தா நின் கழல் * யான் எய்த * ஞானக்
கை தா * காலக் கழிவு செய்யேலே (2)
Pasuram 203 · corpus 2993
செய்யேல் தீவினை என்று * அருள் செய்யும் * என்
கை ஆர் சக்கரக் * கண்ண பிரானே **
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் * நின் கழல்
எய்யாது ஏத்த * அருள்செய் எனக்கே (3)
Pasuram 204 · corpus 2994
எனக்கே ஆட்செய் * எக் காலத்தும் என்று * என்
மனக்கே வந்து * இடைவீடு இன்றி மன்னி **
தனக்கே ஆக * எனைக் கொள்ளும் ஈதே *
எனக்கே கண்ணனை * யான் கொள் சிறப்பே (4)
Pasuram 205 · corpus 2995
சிறப்பில் வீடு * சுவர்க்கம் நரகம் *
இறப்பில் எய்துக * எய்தற்க ** யானும்
பிறப்பு இல் பல் * பிறவிப் பெருமானை *
மறப்பு ஒன்று இன்றி * என்றும் மகிழ்வனே (5)
Pasuram 206 · corpus 2996
மகிழ் கொள் தெய்வம் * உலோகம் அலோகம் *
மகிழ் கொள் சோதி * மலர்ந்த அம்மானே **
மகிழ் கொள் சிந்தை * சொல் செய்கை கொண்டு * என்றும்
மகிழ்வுற்று * உன்னை வணங்க வாராயே (6)
Pasuram 207 · corpus 2997
வாராய் * உன் திருப் பாத மலர்க்கீழ் *
பேராதே யான் வந்து ** அடையும்படி
தாராதாய் * உன்னை என்னுள் * வைப்பில் என்றும்
ஆராதாய் * எனக்கு என்றும் எக்காலே (7)
Pasuram 208 · corpus 2998
எக்காலத்து எந்தையாய் * என்னுள் மன்னில் * மற்று
எக் காலத்திலும் * யாதொன்றும் வேண்டேன் **
மிக்கார் வேத * விமலர் விழுங்கும் * என்
அக்காரக் கனியே * உன்னை யானே (8)
Pasuram 209 · corpus 2999
யானே என்னை * அறியகிலாதே *
யானே என் தனதே * என்று இருந்தேன் **
யானே நீ * என் உடைமையும் நீயே *
வானே ஏத்தும் * எம் வானவர் ஏறே (9)
Pasuram 210 · corpus 3000
ஏறேல் ஏழும் * வென்று ஏர் கொள் இலங்கையை *
நீறே செய்த * நெடுஞ் சுடர்ச் சோதி **
தேறேல் என்னை * உன் பொன் அடிச் சேர்த்து * ஒல்லை
வேறே போக * எஞ்ஞான்றும் விடலே (10)
Pasuram 211 · corpus 3001
விடல் இல் சக்கரத்து * அண்ணலை மேவல் *
விடல் இல் வண் குருகூர்ச் ** சடகோபன் சொல்
கெடல் இல் ஆயிரத்துள் * இவை பத்தும்
கெடல் இல் வீடு செய்யும் * கிளர்வார்க்கே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.