Pasuram 133 · corpus 2923
Pasuram 133
ஊனில் வாழ் உயிரே * நல்லை போ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான் * மதுசூதன் என் அம்மான் **
தானும் யானும் எல்லாம் * தன்னுள்ளே கலந்தொழிந்தோம் *
தேனும் பாலும் நெய்யும் * கன்னலும் * அமுதும் ஒத்தே (1)
Nammazhvar · Pasurams 133–143
Corpus pasurams 2923–2933
This page preserves the source-defined decade 2, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 133 · corpus 2923
ஊனில் வாழ் உயிரே * நல்லை போ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான் * மதுசூதன் என் அம்மான் **
தானும் யானும் எல்லாம் * தன்னுள்ளே கலந்தொழிந்தோம் *
தேனும் பாலும் நெய்யும் * கன்னலும் * அமுதும் ஒத்தே (1)
Pasuram 134 · corpus 2924
ஒத்தார் மிக்காரை * இலையாய மா மாய ! *
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய் ** என்னைப் பெற்ற
அத் தாய் ஆய் தந்தை ஆய் * அறியாதன அறிவித்த *
அத்தா! நீ செய்தன * அடியேன் அறியேனே (2)
Pasuram 135 · corpus 2925
அறியாக் காலத்துள்ளே * அடிமைக்கண் அன்பு செய்வித்து *
அறியா மா மாயத்து * அடியேனை வைத்தாயால் **
அறியாமைக் குறள் ஆய் * நிலம் மாவலி ! மூவடி என்று *
அறியாமை வஞ்சித்தாய் * எனது ஆவியுள் கலந்தே (3)
Pasuram 136 · corpus 2926
எனது ஆவியுள் கலந்த * பெரு நல் உதவிக் கைம்மாறு *
எனது ஆவி தந்தொழிந்தேன் * இனி மீள்வது என்பது உண்டே? **
எனது ஆவி ஆவியும் நீ * பொழில் ஏழும் உண்ட எந்தாய் *
எனது ஆவி யார்? யான் ஆர்? * தந்த நீ கொண்டாக்கினையே (4)
Pasuram 137 · corpus 2927
இனி யார் ஞானங்களால் * எடுக்கல் எழாத எந்தாய் *
கனிவார் வீட்டு இன்பமே * என் கடல் படா அமுதே **
தனியேன் வாழ் முதலே * பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் *
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் * உன பாதம் சேர்ந்தேனே (5)
Pasuram 138 · corpus 2928
சேர்ந்தார் தீவினைகட்கு * அரு நஞ்சைத் திண் மதியை *
தீர்ந்தார் தம் மனத்துப் * பிரியாது அவர் உயிரை **
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை * அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை * அடியேன் அடைந்தேன் * முதல் முன்னமே (6)
Pasuram 139 · corpus 2929
முன் நல் யாழ் பயில் நூல் * நரம்பின் முதிர் சுவையே *
பல் நலார் பயிலும் * பரனே பவித்திரனே **
கன்னலே அமுதே! * கார் முகிலே !என் கண்ணா *
நின் அலால் இலேன்காண் * என்னை நீ குறிக்கொள்ளே (7)
Pasuram 140 · corpus 2930
குறிக்கொள் ஞானங்களால் * எனை ஊழி செய் தவமும் *
கிறிக்கொண்டு இப் பிறப்பே * சில நாளில் எய்தினன் யான் **
உறிக்கொண்ட வெண்ணெய் பால் * ஒளித்து உண்ணும் அம்மான் பின் *
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் * பிறவித் துயர் கடிந்தே (8)
Pasuram 141 · corpus 2931
கடி வார் தண் அம் துழாய்க் * கண்ணன் விண்ணவர் பெருமான் *
படி வானம் இறந்த * பரமன் பவித்திரன் சீர் **
செடி ஆர் நோய்கள் கெடப் * படிந்து குடைந்து ஆடி *
அடியேன் வாய்மடுத்துப் * பருகிக் களித்தேனே (9)
Pasuram 142 · corpus 2932
களிப்பும் கவர்வும் அற்றுப் * பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று *
ஒளிக்கொண்ட சோதியுமாய் * உடன்கூடுவது என்று கொலோ *
துளிக்கின்ற வான் * இந் நிலம் * சுடர் ஆழி * சங்கு ஏந்தி *
அளிக்கின்ற மாயப் பிரான் * அடியார்கள் குழாங்களையே? (10)
Pasuram 143 · corpus 2933
குழாம் கொள் பேர் அரக்கன் * குலம் வீய முனிந்தவனை *
குழாம் கொள் தென் குருகூர்ச் * சடகோபன் தெரிந்து உரைத்த *
குழாம் கொள் ஆயிரத்துள் * இவை பத்தும் உடன் பாடி *
குழாங்களாய் அடியீர் உடன் * கூடிநின்று ஆடுமினே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.