Pasuram 144 · corpus 2934
Pasuram 144
ஆடி ஆடி * அகம் கரைந்து * இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி ** எங்கும்
நாடி நாடி * நரசிங்கா என்று *
வாடி வாடும் * இவ் வாள் நுதலே (1)
Nammazhvar · Pasurams 144–154
Corpus pasurams 2934–2944
This page preserves the source-defined decade 2, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 144 · corpus 2934
ஆடி ஆடி * அகம் கரைந்து * இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி ** எங்கும்
நாடி நாடி * நரசிங்கா என்று *
வாடி வாடும் * இவ் வாள் நுதலே (1)
Pasuram 145 · corpus 2935
வாள் நுதல் * இம் மடவரல் * உம்மைக்
காணும் ஆசையுள் * நைகின்றாள் ** விறல்
வாணன் * ஆயிரம் தோள் துணித்தீர் * உம்மைக்
காண * நீர் இரக்கம் இலீரே (2)
Pasuram 146 · corpus 2936
இரக்க மனத்தோடு * எரி அணை *
அரக்கும் மெழுகும் * ஒக்கும் இவள் **
இரக்கம் எழீர் * இதற்கு என் செய்கேன் *
அரக்கன் இலங்கை * செற்றீருக்கே? (3)
Pasuram 147 · corpus 2937
இலங்கை செற்றவனே என்னும் * பின்னும்
வலம் கொள் * புள் உயர்த்தாய் என்னும் ** உள்ளம்
மலங்க * வெவ் உயிர்க்கும் * கண்ணீர் மிகக்
கலங்கிக் * கைதொழும் நின்று இவளே (4)
Pasuram 148 · corpus 2938
இவள் இராப்பகல் * வாய்வெரீ * இ தன
குவளை ஒண் * கண்ண நீர் கொண்டாள் ** வண்டு
திவளும் * தண் அம் துழாய் கொடீர் * என
தவள வண்ணர் * தகவுகளே? (5)
Pasuram 149 · corpus 2939
தகவு உடையவனே என்னும் * பின்னும்
மிக விரும்பும் * பிரான் என்னும் ** எனது
அக உயிர்க்கு * அமுதே என்னும் * உள்ளம்
உக உருகி * நின்று உள் உளே (6)
Pasuram 150 · corpus 2940
உள் உள் ஆவி * உலர்ந்து உலர்ந்து * என
வள்ளலே * கண்ணனே என்னும் ** பின்னும்
வெள்ள நீர்க் * கிடந்தாய் என்னும் * என
கள்வி தான் * பட்ட வஞ்சனையே (7)
Pasuram 151 · corpus 2941
வஞ்சனே என்னும் * கைதொழும் * தன
நெஞ்சம் வேவ * நெடிது உயிர்க்கும் ** விறல்
கஞ்சனை * வஞ்சனை செய்தீர் * உம்மைத்
தஞ்சம் என்று * இவள் பட்டனவே (8)
Pasuram 152 · corpus 2942
பட்ட போது * எழு போது அறியாள் * விரை
மட்டு அலர் * தண் துழாய் என்னும் ** சுடர்
வட்ட வாய் * நுதி நேமியீர் * நுமது
இட்டம் என்கொல் * இவ் ஏழைக்கே? (9)
Pasuram 153 · corpus 2943
ஏழை பேதை * இராப்பகல் * தன
கேழ் இல் ஒண் * கண்ண நீர் கொண்டாள் ** கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் * இவள்
மாழை நோக்கு ஒன்றும் * வாட்டேன்மினே (10)
Pasuram 154 · corpus 2944
வாட்டம் இல் புகழ் * வாமனனை * இசை
கூட்டி * வண் சடகோபன் சொல் ** அமை
பாட்டு * ஓர் ஆயிரத்து இப் பத்தால் * அடி
சூட்டலாகும் * அம் தாமமே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.