Pasuram 155 · corpus 2945
Pasuram 155
அம் தாமத்து அன்பு செய்து * என் ஆவி சேர் அம்மானுக்கு *
அம் தாமம் வாழ் முடி சங்கு * ஆழி நூல் ஆரம் உள **
செந்தாமரைத்தடம் கண் * செங்கனி வாய் செங்கமலம் *
செந்தாமரை அடிகள் * செம்பொன் திரு உடம்பே (1)
Nammazhvar · Pasurams 155–165
Corpus pasurams 2945–2955
This page preserves the source-defined decade 2, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 155 · corpus 2945
அம் தாமத்து அன்பு செய்து * என் ஆவி சேர் அம்மானுக்கு *
அம் தாமம் வாழ் முடி சங்கு * ஆழி நூல் ஆரம் உள **
செந்தாமரைத்தடம் கண் * செங்கனி வாய் செங்கமலம் *
செந்தாமரை அடிகள் * செம்பொன் திரு உடம்பே (1)
Pasuram 156 · corpus 2946
திரு உடம்பு வான் சுடர் * செந்தாமரை கண் கை கமலம் *
திரு இடமே மார்பம் * அயன் இடமே கொப்பூழ் **
ஒருவு இடமும் * எந்தை பெருமாற்கு அரனே ஓ *
ஒருவு இடம் ஒன்று இன்றி * என்னுள் கலந்தானுக்கே (2)
Pasuram 157 · corpus 2947
என்னுள் கலந்தவன் * செங்கனி வாய் செங்கமலம் *
மின்னும் சுடர் மலைக்கு * கண் பாதம் கை கமலம் **
மன்னும் முழு ஏழ் உலகும் * வயிற்றின் உள *
தன்னுள் கலவாதது * எப் பொருளும் தான் இலையே (3)
Pasuram 158 · corpus 2948
எப் பொருளும் தான் ஆய் * மரதகக் குன்றம் ஒக்கும் *
அப்பொழுதைத் தாமரைப்பூக் * கண் பாதம் கை கமலம் **
எப்பொழுதும் நாள் திங்கள் * ஆண்டு ஊழி ஊழிதொறும் *
அப்பொழுதைக்கு அப்பொழுது * என் ஆரா அமுதமே (4)
Pasuram 159 · corpus 2949
ஆரா அமுதமாய் * அல் ஆவியுள் கலந்த *
கார் ஆர் கருமுகில் போல் * என் அம்மான் கண்ணனுக்கு **
நேரா வாய் செம்பவளம் * கண் பாதம் கை கமலம் *
பேர் ஆரம் நீள் முடி நாண் * பின்னும் இழை பலவே (5)
Pasuram 160 · corpus 2950
பலபலவே ஆபரணம் * பேரும் பலபலவே *
பலபலவே சோதி * வடிவு பண்பு எண்ணில் **
பலபல கண்டு உண்டு * கேட்டு உற்று மோந்து இன்பம் *
பலபலவே ஞானமும் * பாம்பு அணை மேலாற்கேயோ (6)
Pasuram 161 · corpus 2951
பாம்பு அணைமேல் பாற்கடலுள் * பள்ளி அமர்ந்ததுவும் *
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் * ஏறு உடன் ஏழ் செற்றதுவும் **
தேம் பணைய சோலை * மராமரம் ஏழ் எய்ததுவும் *
பூம் பிணைய தண் துழாய்ப் * பொன் முடி அம் போர் ஏறே (7)
Pasuram 162 · corpus 2952
பொன் முடி அம் போர் * ஏற்றை எம்மானை நால் தடம் தோள் *
தன் முடிவு ஒன்று இல்லாத * தண் துழாய் மாலையனை **
என் முடிவு காணாதே * என்னுள் கலந்தானை *
சொல்முடிவு காணேன் நான் * சொல்லுவது என்? சொல்லீரே (8)
Pasuram 163 · corpus 2953
சொல்லீர் என் அம்மானை * என் ஆவி ஆவிதனை *
எல்லை இல் சீர் * என் கருமாணிக்கச் சுடரை **
நல்ல அமுதம் * பெறற்கு அரிய வீடும் ஆய் *
அல்லி மலர் விரை ஒத்து * ஆண் அல்லன் பெண் அல்லனே (9)
Pasuram 164 · corpus 2954
ஆண் அல்லன் பெண் அல்லன் * அல்லா அலியும் அல்லன் *
காணலும் ஆகான் * உளன் அல்லன் இல்லை அல்லன் **
பேணுங்கால் பேணும் * உரு ஆகும் அல்லனும் ஆம் *
கோணை பெரிது உடைத்து * எம் பெம்மானைக் கூறுதலே (10)
Pasuram 165 · corpus 2955
கூறுதல் ஒன்று ஆராக் * குடக் கூத்த அம்மானை *
கூறுதலே மேவிக் * குருகூர்ச் சடகோபன் **
கூறின அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
கூறுதல் வல்லார் உளரேல் * கூடுவர் வைகுந்தமே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.