Corpus pasurams 2956–2966

This page preserves the source-defined decade 2, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 166 · corpus 2956

Pasuram 166

Study resources at Uveda
வைகுந்தா மணிவண்ணனே * என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி *
 வைகும் வைகல் தோறும் * அமுது ஆய வான் ஏறே **
 செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து * அசுரர்க்குத் தீமைகள்
 செய் குந்தா * உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே (1)

Pasuram 167 · corpus 2957

Pasuram 167

Study resources at Uveda
சிக்கெனச் சிறிது ஓர் இடமும் * புறப்படாத் தன்னுள்ளே * உலகுகள்
 ஒக்கவே விழுங்கிப் * புகுந்தான் புகுந்ததற்பின் **
 மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் * துளக்கு அற்று அமுதம் ஆய் * எங்கும்
 பக்கம் நோக்கு அறியான் * என் பைந்தாமரைக் கண்ணனே (2)

Pasuram 168 · corpus 2958

Pasuram 168

Study resources at Uveda
தாமரைக் கண்ணனை * விண்ணோர் பரவும் தலைமகனை * துழாய் விரைப்
 பூ மருவு கண்ணி * எம் பிரானைப் பொன்மலையை **
 நாம் மருவி நன்கு ஏத்தி * உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட * நாவு அலர்
 பா மருவி நிற்கத் தந்த * பான்மையே வள்ளலே (3)

Pasuram 169 · corpus 2959

Pasuram 169

Study resources at Uveda
வள்ளலே மதுசூதனா * என் மரதக மலையே * உனை நினைந்து
 எள்கல் தந்த எந்தாய் * உன்னை எங்ஙனம் விடுகேன் **
 வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் * களித்து உகந்து உகந்து *
 உள்ள நோய்கள் எல்லாம் துரந்து * உய்ந்து போந்திருந்தே? (4)

Pasuram 170 · corpus 2960

Pasuram 170

Study resources at Uveda
உய்ந்து போந்து என் உலப்பு இலாத * வெம் தீவினைகளை நாசம் செய்து * உனது
 அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ **
 ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் * பாற்கடல் யோக நித்திரை *
 சிந்தை செய்த எந்தாய் * உன்னைச் சிந்தை செய்து செய்தே? (5)

Pasuram 171 · corpus 2961

Pasuram 171

Study resources at Uveda
உன்னைச் சிந்தை செய்து செய்து * உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி * என்
 முன்னைத் தீவினைகள் * முழு வேர் அரிந்தனன் யான் **
 உன்னைச் சிந்தையினால் * இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட * என்
 முன்னைக் கோளரியே * முடியாதது என் எனக்கே? (6)

Pasuram 172 · corpus 2962

Pasuram 172

Study resources at Uveda
முடியாதது என் எனக்கேல் இனி? * முழு ஏழ் உலகும் உண்டான் * உகந்து வந்து
 அடியேன் உட்புகுந்தான் * அகல்வானும் அல்லன் இனி **
 செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து * எமர் கீழ் மேல் எழு பிறப்பும் *
 விடியா வெம் நரகத்து என்றும் * சேர்தல் மாறினரே (7)

Pasuram 173 · corpus 2963

Pasuram 173

Study resources at Uveda
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து * அடியை அடைந்து உள்ளம் தேறி *
 ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் * யான் மூழ்கினன் **
 பாறிப் பாறி அசுரர் தம் * பல் குழாங்கள் நீறு எழ * பாய் பறவை ஒன்று
 ஏறி வீற்றிருந்தாய் * உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் (8)

Pasuram 174 · corpus 2964

Pasuram 174

Study resources at Uveda
எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய் * இலங்கை செற்றாய் * மராமரம்
 பைந்தாள் ஏழ் உருவ * ஒரு வாளி கோத்த வில்லா **
 கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே * உன்னை என்னுள்ளே குழைத்த எம்
 மைந்தா * வான் ஏறே * இனி எங்குப் போகின்றதே? (9)

Pasuram 175 · corpus 2965

Pasuram 175

Study resources at Uveda
போகின்ற காலங்கள் போய காலங்கள் * போகு காலங்கள் * தாய் தந்தை உயிர்
 ஆகின்றாய் * உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ? **
 பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் * நாதனே! பரமா * தண் வேங்கடம்
 மேகின்றாய் * தண் துழாய் விரை நாறு கண்ணியனே (10)

Pasuram 176 · corpus 2966

Pasuram 176

Study resources at Uveda
கண்ணித் தண் அம் துழாய் முடிக் * கமலத் தடம் பெருங் கண்ணனை * புகழ்
 நண்ணி தென் குருகூர்ச் * சடகோபன் மாறன் சொன்ன **
 எண்ணில் சோர்வு இல் அந்தாதி * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் *
 பண்ணில் பாட வல்லார் * அவர் கேசவன் தமரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.