Corpus pasurams 2967–2979

This page preserves the source-defined decade 2, chapter 7 grouping and brings its 13 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 177 · corpus 2967

Pasuram 177

Study resources at Uveda
கேசவன் தமர் * கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் *
 மா சதிர் இது பெற்று * நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா! **
 ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் * விண்ணோர்
 நாயகன் * எம் பிரான் எம்மான் * நாராயணனாலே (1)

Pasuram 178 · corpus 2968

Pasuram 178

Study resources at Uveda
நாரணன் முழு ஏழ் உலகுக்கும் * நாதன் வேத மயன் *
 காரணம் கிரிசை கருமம் இவை * முதல்வன் எந்தை **
 சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் * தொழுது ஏத்த நின்று *
 வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் * என் மாதவனே (2)

Pasuram 179 · corpus 2969

Pasuram 179

Study resources at Uveda
மாதவன் என்றதே கொண்டு * என்னை இனி இப்பால் பட்டது *
 யாது அவங்களும் சேர்கொடேன் என்று * என்னுள் புகுந்து இருந்து **
 தீது அவம் கெடுக்கும் அமுதம் * செந்தாமரைக் கண் குன்றம் *
 கோது அவம் இல் என் கன்னல் கட்டி * எம்மான் என் கோவிந்தனே (3)

Pasuram 180 · corpus 2970

Pasuram 180

Study resources at Uveda
கோவிந்தன் குடக் கூத்தன் * கோவலன் என்று என்றே குனித்து *
 தேவும் தன்னையும் * பாடி ஆடத் திருத்தி * என்னைக் கொண்டு என் **
 பாவம் தன்னையும் * பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் *
 மேவும் தன்மையம் ஆக்கினான் * வல்லன் எம்பிரான் விட்டுவே (4)

Pasuram 181 · corpus 2971

Pasuram 181

Study resources at Uveda
விட்டு இலங்கு செஞ்சோதித் * தாமரை பாதம் கைகள் கண்கள் *
 விட்டு இலங்கு கருஞ்சுடர் * மலையே திரு உடம்பு **
 விட்டு இலங்கு மதியம் சீர் * சங்கு சக்கரம் பரிதி *
 விட்டு இலங்கு முடி அம்மான் * மதுசூதனன் தனக்கே (5)

Pasuram 182 · corpus 2972

Pasuram 182

Study resources at Uveda
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று * எத்தாலும் கருமம் இன்றி *
 துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட * நின்று ஊழி ஊழிதொறும் **
 எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் * எனக்கே அருள்கள் செய்ய *
 விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் * திரிவிக்கிரமனையே (6)

Pasuram 183 · corpus 2973

Pasuram 183

Study resources at Uveda
திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் * எம்மான் என் செங்கனி வாய் *
 உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு * நிறத்தனன் என்று என்று ** உள்ளிப்
 பரவிப் பணிந்து * பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே *
 மருவித் தொழும் மனமே தந்தாய் * வல்லைகாண் என் வாமனனே (7)

Pasuram 184 · corpus 2974

Pasuram 184

Study resources at Uveda
வாமனன் என் மரதக வண்ணன் * தாமரைக் கண்ணினன்
 காமனைப் பயந்தாய் * என்று என்று உன் கழல் * பாடியே பணிந்து **
 தூ மனத்தனனாய்ப் * பிறவித் துழதி நீங்க * என்னைத்
 தீ மனம் கெடுத்தாய் * உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே (8)

Pasuram 185 · corpus 2975

Pasuram 185

Study resources at Uveda
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் * என்று என்று இராப்பகல் வாய்
 வெரீஇ * அலமந்து கண்கள் நீர் மல்கி * வெவ்வுயிர்த்து உயிர்த்து **
 மரீஇய தீவினை மாள இன்பம் வளர * வைகல் வைகல்
 இரீஇ * உன்னை என்னுள் வைத்தனை * என் இருடீகேசனே (9)

Pasuram 186 · corpus 2976

Pasuram 186

Study resources at Uveda
இருடீகேசன் எம் பிரான் * இலங்கை அரக்கர் குலம் *
 முருடு தீர்த்த பிரான் எம்மான் * அமரர் பெம்மான் என்று என்று **
 தெருடியாகில் நெஞ்சே வணங்கு * திண்ணம் அறி அறிந்து *
 மருடியேலும் விடேல் கண்டாய் * நம்பி பற்பநாபனையே (10)

Pasuram 187 · corpus 2977

Pasuram 187

Study resources at Uveda
பற்பநாபன் உயர்வு அற உயரும் * பெரும் திறலோன் *
 எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு * எனக்கே தன்னைத் தந்த
 கற்பகம் ** என் அமுதம் கார் முகில் போலும் * வேங்கட நல்
 வெற்பன் * விசும்போர் பிரான் * எந்தை தாமோதரனே (11)

Pasuram 188 · corpus 2978

Pasuram 188

Study resources at Uveda
தாமோதரனை தனி முதல்வனை * ஞாலம் உண்டவனை *
 ஆமோ தரம் அறிய * ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் **
 தாமோதரன் உரு ஆகிய * சிவற்கும் திசைமுகற்கும் *
 ஆமோ தரம் அறிய * எம்மானை என் ஆழி வண்ணனையே? (12)

Pasuram 189 · corpus 2979

Pasuram 189

Study resources at Uveda
வண்ண மா மணிச் சோதியை * அமரர் தலைமகனை *
 கண்ணனை நெடுமாலைத் * தென் குருகூர்ச் சடகோபன் **
 பண்ணிய தமிழ் மாலை * ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் *
 பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு * அண்ணல் தாள் அணைவிக்குமே (13)'

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.