Corpus pasurams 2980–2990

This page preserves the source-defined decade 2, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 190 · corpus 2980

Pasuram 190

Study resources at Uveda
அணைவது அரவு அணைமேல் * பூம்பாவை ஆகம்
 புணர்வது * இருவர் அவர் முதலும் தானே **
 இணைவன் ஆம் * எப் பொருட்கும் வீடு முதல் ஆம் *
 புணைவன் * பிறவிக்கடல் நீந்துவார்க்கே (1)

Pasuram 191 · corpus 2981

Pasuram 191

Study resources at Uveda
நீந்தும் துயர்ப் பிறவி * உட்பட மற்று எவ் எவையும் *
 நீந்தும் துயர் இல்லா * வீடு முதல் ஆம் **
 பூந் தண் புனல் பொய்கை * யானை இடர் கடிந்த *
 பூந் தண் துழாய் * என் தனி நாயகன் புணர்ப்பே (2)

Pasuram 192 · corpus 2982

Pasuram 192

Study resources at Uveda
புணர்க்கும் அயன் ஆம் * அழிக்கும் அரன் ஆம் *
 புணர்த்த தன் உந்தியோடு * ஆகத்து மன்னி **
 புணர்த்த திருஆகித் * தன் மார்வில் தான் சேர் *
 புணர்ப்பன் பெரும் புணர்ப்பு * எங்கும் புலனே (3)

Pasuram 193 · corpus 2983

Pasuram 193

Study resources at Uveda
புலன் ஐந்து மேயும் * பொறி ஐந்தும் நீங்கி *
 நலம் அந்தம் இல்லது ஓர் * நாடு புகுவீர் **
 அலமந்து வீய * அசுரரைச் செற்றான் *
 பலம் முந்து சீரில் * படிமின் ஓவாதே (4)

Pasuram 194 · corpus 2984

Pasuram 194

Study resources at Uveda
ஓவாத் துயர்ப் பிறவி * உட்பட மற்று எவ் எவையும் *
 மூவாத் தனி முதலாய் * மூவுலகும் காவலோன் **
 மா ஆகி ஆமை ஆய் * மீன் ஆகி மானிடம் ஆம் *
 தேவாதி தேவ பெருமான் * என் தீர்த்தனே (5)

Pasuram 195 · corpus 2985

Pasuram 195

Study resources at Uveda
தீர்த்தன் உலகு அளந்த * சேவடிமேல் பூந்தாமம்
 சேர்த்தி அவையே * சிவன் முடிமேல் தான் கண்டு **
 பார்த்தன் தெளிந்தொழிந்த * பைந்துழாயான் பெருமை *
 பேர்த்தும் ஒருவரால் * பேசக் கிடந்ததே? (6)

Pasuram 196 · corpus 2986

Pasuram 196

Study resources at Uveda
கிடந்து இருந்து நின்று அளந்து * கேழல் ஆய் கீழ்ப் புக்கு *
 இடந்திடும் * தன்னுள் கரக்கும் உமிழும் **
 தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் * பார் என்னும் *
 மடந்தையை * மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே? (7)

Pasuram 197 · corpus 2987

Pasuram 197

Study resources at Uveda
காண்பார் ஆர் எம் ஈசன் * கண்ணனை? என் காணுமாறு? *
 ஊண் பேசில் * எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா **
 சேண் பால வீடோ * உயிரோ மற்று எப் பொருட்கும் *
 ஏண் பாலும் சோரான் * பரந்து உளன் ஆம் எங்குமே (8)

Pasuram 198 · corpus 2988

Pasuram 198

Study resources at Uveda
எங்கும் உளன் கண்ணன் என்ற * மகனைக் காய்ந்து *
 இங்கு இல்லையால் என்று * இரணியன் தூண் புடைப்ப **
 அங்கு அப்பொழுதே * அவன் வீயத் தோன்றிய * என்
 சிங்கப் பிரான் பெருமை * ஆராயும் சீர்மைத்தே? (9)

Pasuram 199 · corpus 2989

Pasuram 199

Study resources at Uveda
சீர்மை கொள் வீடு * சுவர்க்கம் நரகு ஈறா *
 ஈர்மை கொள் தேவர் * நடுவா மற்று எப் பொருட்கும் **
 வேர் முதல் ஆய் வித்து * ஆய்ப் பரந்து தனி நின்ற *
 கார் முகில் போல் வண்ணன் * என் கண்ணனை நான் கண்டேனே (10)

Pasuram 200 · corpus 2990

Pasuram 200

Study resources at Uveda
கண் தலங்கள் செய்ய * கரு மேனி அம்மானை *
 வண்டு அலம்பும் சோலை * வழுதி வள நாடன் **
 பண் தலையில் சொன்ன தமிழ் * ஆயிரத்து இப் பத்தும் வல்லார் *
 விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் * எம் மா வீடே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.