Corpus pasurams 3090–3100

This page preserves the source-defined decade 3, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 300 · corpus 3090

Pasuram 300

Study resources at Uveda
முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் * சீர்
 அடியானே * ஆழ் கடலைக் கடைந்தாய் * புள் ஊர்
 கொடியானே ** கொண்டல் வண்ணா * அண்டத்து உம்பரில்
 நெடியானே * என்று கிடக்கும் என் நெஞ்சமே (1)

Pasuram 301 · corpus 3091

Pasuram 301

Study resources at Uveda
நெஞ்சமே நீள் நகர் ஆக * இருந்த என்
 தஞ்சனே * தண் இலங்கைக்கு * இறையைச் செற்ற
 நஞ்சனே ** ஞாலம் கொள்வான் * குறள் ஆகிய
 வஞ்சனே * என்னும் எப்போதும் * என் வாசகமே (2)

Pasuram 302 · corpus 3092

Pasuram 302

Study resources at Uveda
வாசகமே ஏத்த அருள் செய்யும் * வானவர் தம்
 நாயகனே * நாள் இளம் திங்களைக் * கோள் விடுத்து **
 வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட * ஆன் ஆயர்
 தாயவனே * என்று தடவும் என் கைகளே (3)

Pasuram 303 · corpus 3093

Pasuram 303

Study resources at Uveda
கைகளால் ஆரத் * தொழுது தொழுது உன்னை
 வைகலும் மாத்திரைப் * போதும் ஓர் வீடு இன்றி **
 பை கொள் பாம்பு ஏறி * உறை பரனே * உன்னை
 மெய்கொள்ளக் காண * விரும்பும் என் கண்களே (4)

Pasuram 304 · corpus 3094

Pasuram 304

Study resources at Uveda
கண்களால் காண வருங்கொல்? * என்று ஆசையால்
 மண் கொண்ட வாமனன் * ஏற மகிழ்ந்து செல் **
 பண் கொண்ட புள்ளின் * சிறகு ஒலி பாவித்து *
 திண் கொள்ள ஓர்க்கும் * கிடந்து என் செவிகளே (5)

Pasuram 305 · corpus 3095

Pasuram 305

Study resources at Uveda
செவிகளால் ஆர * நின் கீர்த்திக் கனி என்னும்
 கவிகளே * காலப் பண் தேன் * உறைப்பத் துற்று **
 புவியின்மேல் * பொன் நெடும் சக்கரத்து உன்னையே *
 அவிவு இன்றி ஆதரிக்கும் * எனது ஆவியே (6)

Pasuram 306 · corpus 3096

Pasuram 306

Study resources at Uveda
ஆவியே ஆர் அமுதே * என்னை ஆளுடை
 தூவி அம் புள் உடையாய் * சுடர் நேமியாய் **
 பாவியேன் நெஞ்சம் * புலம்பப் பலகாலும் *
 கூவியும் காணப்பெறேன் * உன கோலமே (7)

Pasuram 307 · corpus 3097

Pasuram 307

Study resources at Uveda
கோலமே தாமரைக் கண்ணது ஓர் * அஞ்சன
 நீலமே * நின்று எனது ஆவியை * ஈர்கின்ற
 சீலமே ** சென்று செல்லாதன * முன் நிலாம்
 காலமே * உன்னை எந் நாள் * கண்டுகொள்வனே? (8)

Pasuram 308 · corpus 3098

Pasuram 308

Study resources at Uveda
கொள்வன் நான் மாவலி * மூவடி தா என்ற
 கள்வனே * கஞ்சனை வஞ்சித்து * வாணனை
 உள் வன்மை தீர ** ஓர் ஆயிரம் தோள் துணித்த *
 புள் வல்லாய் * உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? (9)

Pasuram 309 · corpus 3099

Pasuram 309

Study resources at Uveda
பொருந்திய மா மருதின் இடை போய * எம்
 பெருந்தகாய் * உன் கழல் காணிய பேதுற்று **
 வருந்தி நான் * வாசகமாலை கொண்டு * உன்னையே
 இருந்து இருந்து * எத்தனை காலம் புலம்புவனே? (10)

Pasuram 310 · corpus 3100

Pasuram 310

Study resources at Uveda
புலம்பு சீர்ப் * பூமி அளந்த பெருமானை *
 நலம் கொள் சீர் * நன் குருகூர்ச் சடகோபன் ** சொல்
 வலம் கொண்ட ஆயிரத்துள் * இவையும் ஓர் பத்து
 இலங்கு வான் * யாவரும் ஏறுவர் சொன்னாலே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.