Corpus pasurams 3101–3111

This page preserves the source-defined decade 3, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 311 · corpus 3101

Pasuram 311

Study resources at Uveda
சொன்னால் விரோதம் இது * ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ *
 என் நாவில் இன் கவி * யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் **
 தென்னா தெனா என்று * வண்டு முரல் திருவேங்கடத்து *
 என் ஆனை என் அப்பன் * எம் பெருமான் உளனாகவே (1)

Pasuram 312 · corpus 3102

Pasuram 312

Study resources at Uveda
உளனாகவே எண்ணித் * தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை *
 வளனா மதிக்கும் * இம் மானிடத்தைக் கவி பாடி என் **
 குளன் ஆர் கழனி சூழ் * கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே *
 உளனாய எந்தையை * எந்தை பெம்மானை ஒழியவே? (2)

Pasuram 313 · corpus 3103

Pasuram 313

Study resources at Uveda
ஒழிவு ஒன்று இல்லாத * பல் ஊழிதோறு ஊழி நிலாவப் * போம்
 வழியைத் தரும் * நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய் **
 கழிய மிக நல்லவான் * கவி கொண்டு புலவீர்காள்! *
 இழியக் கருதி * ஓர் மானிடம் பாடல் என் ஆவதே? (3)

Pasuram 314 · corpus 3104

Pasuram 314

Study resources at Uveda
என் ஆவது? எத்தனை நாளைக்குப் போதும் * புலவீர்காள்! *
 மன்னா மனிசரைப் * பாடிப் படைக்கும் பெரும் பொருள்? **
 மின் ஆர் மணி முடி * விண்ணவர் தாதையைப் பாடினால் *
 தன்னாகவே கொண்டு * சன்மம் செய்யாமை கொள்ளுமே (4)

Pasuram 315 · corpus 3105

Pasuram 315

Study resources at Uveda
கொள்ளும் பயன் இல்லைக் * குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை *
 வள்ளல் புகழ்ந்து * நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்! **
 கொள்ளக் குறைவு * இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் **
 என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் * கவி சொல்ல வம்மினோ (5)

Pasuram 316 · corpus 3106

Pasuram 316

Study resources at Uveda
வம்மின் புலவீர்! * நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ *
 இம் மன் உலகினில் * செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் **
 நும் இன் கவி கொண்டு * நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால் *
 செம் மின் சுடர் முடி * என் திருமாலுக்குச் சேருமே (6)

Pasuram 317 · corpus 3107

Pasuram 317

Study resources at Uveda
சேரும் கொடை புகழ் * எல்லை இலானை * ஓர் ஆயிரம்
 பேரும் உடைய பிரானை அல்லால் * மற்று யான் கிலேன் **
 மாரி அனைய கை * மால் வரை ஒக்கும் திண் தோள் என்று *
 பாரில் ஓர் பற்றையைப் * பச்சைப் பசும் பொய்கள் பேசவே (7)

Pasuram 318 · corpus 3108

Pasuram 318

Study resources at Uveda
வேயின் மலிபுரை * தோளி பின்னைக்கு மணாளனை *
 ஆய பெரும் புகழ் * எல்லை இலாதன பாடிப்போய் **
 காயம் கழித்து * அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன் *
 மாய மனிசரை * என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? (8)

Pasuram 319 · corpus 3109

Pasuram 319

Study resources at Uveda
வாய்கொண்டு மானிடம் பாட வந்த * கவியேன் அல்லேன் *
 ஆய்கொண்ட சீர் வள்ளல் * ஆழிப் பிரான் எனக்கே உளன் **
 சாய் கொண்ட இம்மையும் சாதித்து * வானவர் நாட்டையும் *
 நீ கண்டுகொள் என்று * வீடும் தரும் நின்றுநின்றே (9)

Pasuram 320 · corpus 3110

Pasuram 320

Study resources at Uveda
நின்றுநின்று பல நாள் உய்க்கும் * இவ் உடல் நீங்கிப்போய் *
 சென்று சென்று ஆகிலும் கண்டு * சன்மம் கழிப்பான் எண்ணி **
 ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் * கவி ஆயினேற்கு *
 என்றும் என்றும் இனி * மற்றொருவர் கவி ஏற்குமே? (10)

Pasuram 321 · corpus 3111

Pasuram 321

Study resources at Uveda
ஏற்கும் பெரும் புகழ் * வானவர் ஈசன் கண்ணன் தனக்கு *
 ஏற்கும் பெரும் புகழ் * வண் குருகூர்ச் சடகோபன் சொல் **
 ஏற்கும் பெரும் புகழ் * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து *
 ஏற்கும் பெரும் புகழ் * சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.