Corpus pasurams 3123–3133

This page preserves the source-defined decade 4, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 333 · corpus 3123

Pasuram 333

Study resources at Uveda
ஒரு நாயகமாய் ஓட * உலகு உடன் ஆண்டவர் *
 கரு நாய் கவர்ந்த காலர் * சிதைகிய பானையர் **
 பெரு நாடு காண * இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் *
 திருநாரணன் தாள் * காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ (1)

Pasuram 334 · corpus 3124

Pasuram 334

Study resources at Uveda
உய்ம்மின் திறைகொணர்ந்து * என்று உலகு ஆண்டவர் * இம்மையே
 தம் இன்சுவை மடவாரைப் * பிறர் கொள்ளத் தாம் விட்டு **
 வெம் மின் ஒளி வெயில் * கானகம் போய்க் குமை தின்பர்கள் *
 செம்மின் முடித் திருமாலை * விரைந்து அடி சேர்மினோ (2)

Pasuram 335 · corpus 3125

Pasuram 335

Study resources at Uveda
அடி சேர் முடியினர் ஆகி * அரசர்கள் தாம் தொழ *
 இடி சேர் முரசங்கள் * முற்றத்து இயம்ப இருந்தவர் **
 பொடி சேர் துகளாய்ப் போவர்கள் * ஆதலில் நொக்கென *
 கடி சேர் துழாய் முடிக் * கண்ணன் கழல்கள் நினைமினோ (3)

Pasuram 336 · corpus 3126

Pasuram 336

Study resources at Uveda
நினைப்பான் புகில் கடல் எக்கலின் * நுண்மணலில் பலர் *
 எனைத்தோர் உகங்களும் * இவ் உலகு ஆண்டு கழிந்தவர் **
 மனைப்பால் மருங்கு அற * மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம் *
 பனைத் தாள் மத களிறு அட்டவன் * பாதம் பணிமினோ (4)

Pasuram 337 · corpus 3127

Pasuram 337

Study resources at Uveda
பணிமின் திருவருள் என்னும் * அம் சீதப் பைம் பூம் பள்ளி *
 அணி மென் குழலார் * இன்பக் கலவி அமுது உண்டார் **
 துணி முன்பு நாலப் பல் ஏழையர் * தாம் இழிப்பச் செல்வர் *
 மணி மின்னு மேனி * நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ (5)

Pasuram 338 · corpus 3128

Pasuram 338

Study resources at Uveda
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது * மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து *
 ஆழ்ந்தார் என்று அல்லால் * அன்று முதல் இன்று அறுதியா **
 வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் * என்பது இல்லை நிற்குறில் *
 ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி * அண்ணல் அடியவர் ஆமினோ (6)

Pasuram 339 · corpus 3129

Pasuram 339

Study resources at Uveda
ஆம் இன் சுவை அவை * ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின் *
 தூ மென் மொழி மடவார் இரக்கப் * பின்னும் துற்றுவார் **
 ஈமின் எமக்கு ஒரு துற்று என்று * இடறுவர் ஆதலின் *
 கோமின் துழாய் முடி * ஆதி அம் சோதி குணங்களே (7)

Pasuram 340 · corpus 3130

Pasuram 340

Study resources at Uveda
குணம் கொள் நிறை புகழ் * மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து *
 இணங்கி உலகு உடன் ஆக்கிலும் * ஆங்கு அவனை இல்லார் **
 மணம் கொண்ட போகத்து மன்னியும் * மீள்வர்கள் மீள்வு இல்லை *
 பணம் கொள் அரவு அணையான் * திருநாமம் படிமினோ (8)

Pasuram 341 · corpus 3131

Pasuram 341

Study resources at Uveda
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து * ஐம்புலன் வென்று *
 செடி மன்னு காயம் செற்றார்களும் * ஆங்கு அவனை இல்லார் **
 குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் * மீள்வர்கள் மீள்வு இல்லை *
 கொடி மன்னு புள் உடை * அண்ணல் கழல்கள் குறுகுமினோ (9)

Pasuram 342 · corpus 3132

Pasuram 342

Study resources at Uveda
குறுக மிக உணர்வத்தொடு * நோக்கி எல்லாம் விட்ட *
 இறுகல் இறப்பு என்னும் * ஞானிக்கும் அப் பயன் இல்லையேல் **
 சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் * பின்னும் வீடு இல்லை *
 மறுகல் இல் ஈசனைப் பற்றி * விடாவிடில் வீடு அஃதே (10)

Pasuram 343 · corpus 3133

Pasuram 343

Study resources at Uveda
அஃதே உய்யப் புகும் ஆறு என்று * கண்ணன் கழல்கள் மேல் *
 கொய் பூம் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் குற்றேவல் **
 செய் கோலத்து ஆயிரம் * சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும் *
 அஃகாமல் கற்பவர் * ஆழ் துயர் போய் உய்யற்பாலரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.