Corpus pasurams 3134–3144

This page preserves the source-defined decade 4, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 344 · corpus 3134

Pasuram 344

Study resources at Uveda
பாலன் ஆய் * ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி *
 ஆல் இலை * அன்னவசம் செய்யும் அண்ணலார் **
 தாள் இணைமேல் அணி * தண் அம் துழாய் என்றே
 மாலுமால் * வல்வினையேன் * மட வல்லியே (1)

Pasuram 345 · corpus 3135

Pasuram 345

Study resources at Uveda
வல்லி சேர் நுண் இடை * ஆய்ச்சியர் தம்மொடும் *
 கொல்லைமை செய்து * குரவை பிணைந்தவர் **
 நல் அடிமேல் அணி * நாறு துழாய் என்றே
 சொல்லுமால் * சூழ் வினையாட்டியேன் * பாவையே (2)

Pasuram 346 · corpus 3136

Pasuram 346

Study resources at Uveda
பா இயல் வேத * நல் மாலை பல கொண்டு *
 தேவர்கள் மா முனிவர் * இறைஞ்ச நின்ற **
 சேவடிமேல் அணி * செம் பொன் துழாய் என்றே
 கூவுமால் * கோள் வினையாட்டியேன் கோதையே (3)

Pasuram 347 · corpus 3137

Pasuram 347

Study resources at Uveda
கோது இல வண் புகழ் * கொண்டு சமயிகள் *
 பேதங்கள் சொல்லிப் * பிதற்றும் பிரான் பரன் **
 பாதங்கள் மேல் அணி * பைம் பொன் துழாய் என்றே
 ஓதுமால் * ஊழ்வினையேன் * தடந் தோளியே (4)

Pasuram 348 · corpus 3138

Pasuram 348

Study resources at Uveda
தோளி சேர் பின்னை பொருட்டு * எருது ஏழ் தழீஇக்
 கோளியார் * கோவலனார் * குடக் கூத்தனார் **
 தாள் இணைமேல் அணி * தண் அம் துழாய் என்றே
 நாளும் நாள் * நைகின்றதால் * என் தன் மாதரே (5)

Pasuram 349 · corpus 3139

Pasuram 349

Study resources at Uveda
மாதர் மா மண் மடந்தை பொருட்டு * ஏனம் ஆய் *
 ஆதி அம் காலத்து * அகல் இடம் கீண்டவர் **
 பாதங்கள் மேல் அணி * பைம் பொன் துழாய் என்றே
 ஓதும் மால் * எய்தினள் * என் தன் மடந்தையே (6)

Pasuram 350 · corpus 3140

Pasuram 350

Study resources at Uveda
மடந்தையை * வண் கமலத் திருமாதினை *
 தடம் கொள் தார் மார்பினில் * வைத்தவர் தாளின்மேல் **
 வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே * இவள்
 மடங்குமால் * வாண் நுதலீர்! * என் மடக்கொம்பே (7)

Pasuram 351 · corpus 3141

Pasuram 351

Study resources at Uveda
கொம்பு போல் சீதைபொருட்டு * இலங்கை நகர் *
 அம்பு எரி உய்த்தவர் * தாள் இணை மேல் அணி **
 வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே * இவள்
 நம்புமால் * நான் இதற்கு என் செய்கேன் * நங்கைமீர்? (8)

Pasuram 352 · corpus 3142

Pasuram 352

Study resources at Uveda
நங்கைமீர் நீரும் * ஓர் பெண் பெற்று நல்கினீர் *
 எங்ஙனே சொல்லுகேன் * யான் பெற்ற ஏழையை? **
 சங்கு என்னும் சக்கரம் என்னும் * துழாய் என்னும் *
 இங்ஙனே சொல்லும் * இராப் பகல் என்செய்கேன்? (9)

Pasuram 353 · corpus 3143

Pasuram 353

Study resources at Uveda
என் செய்கேன்? என்னுடைப் பேதை * என் கோமளம் *
 என் சொல்லும் * என் வசமும் அல்லள் நங்கைமீர் **
 மின் செய் பூண் மார்பினன் * கண்ணன் கழல் துழாய் *
 பொன் செய் பூண் * மென் முலைக்கு என்று மெலியுமே (10)

Pasuram 354 · corpus 3144

Pasuram 354

Study resources at Uveda
மெலியும் நோய் தீர்க்கும் * நம் கண்ணன் கழல்கள்மேல் *
 மலி புகழ் வண் குருகூர்ச் * சடகோபன் சொல் **
 ஒலி புகழ் ஆயிரத்து * இப் பத்தும் வல்லவர் *
 மலி புகழ் வானவர்க்கு ஆவர் * நல் கோவையே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.