Corpus pasurams 3222–3232

This page preserves the source-defined decade 4, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 432 · corpus 3222

Pasuram 432

Study resources at Uveda
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் * யாதும் இல்லா
 அன்று * நான்முகன் தன்னொடு * தேவர் உலகோடு உயிர் படைத்தான் **
 குன்றம் போல் மணி மாடம் நீடு * திருக்குருகூர் அதனுள் *
 நின்ற ஆதிப்பிரான் நிற்க * மற்றைத் தெய்வம் நாடுதிரே? (1)

Pasuram 433 · corpus 3223

Pasuram 433

Study resources at Uveda
நாடி நீர் வணங்கும் தெய்வமும் * உம்மையும் முன் படைத்தான் *
 வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் * அவன் மேவி உறை கோயில் **
 மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய * திருக்குருகூர் அதனை *
 பாடி ஆடி பரவிச் செல்மின்கள் * பல் உலகீர் பரந்தே (2)

Pasuram 434 · corpus 3224

Pasuram 434

Study resources at Uveda
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து * அன்று உடனே விழுங்கி *
 கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது * கண்டும் தெளியகில்லீர் **
 சிரங்களால் அமரர் வணங்கும் * திருக்குருகூர் அதனுள் *
 பரன் திறம் அன்றி பல் உலகீர் * தெய்வம் மற்று இல்லை பேசுமினே (3)

Pasuram 435 · corpus 3225

Pasuram 435

Study resources at Uveda
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் * பிறர்க்கும்
 நாயகன் அவனே * கபால நல் மோக்கத்துக் * கண்டு கொள்மின் **
 தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய * திருக்குருகூர் அதனுள் *
 ஈசன்பால் ஓர் அவம் பறைதல் * என் ஆவது இலிங்கியர்க்கே? (4)

Pasuram 436 · corpus 3226

Pasuram 436

Study resources at Uveda
இலிங்கத்து இட்ட புராணத்தீரும் * சமணரும் சாக்கியரும் *
 வலிந்து வாது செய்வீர்களும் * மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் **
 மலிந்து செந்நெல் கவரி வீசும் * திருக்குருகூர் அதனுள் *
 பொலிந்து நின்ற பிரான் கண்டீர் * ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே (5)

Pasuram 437 · corpus 3227

Pasuram 437

Study resources at Uveda
போற்றி மற்று ஓர் தெய்வம் * பேணப் புறத்திட்டு * உம்மை இன்னே
 தேற்றி வைத்தது * எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே **
 சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு * திருக்குருகூர் அதனுள் *
 ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் * அது அறிந்து அறிந்து ஓடுமினே (6)

Pasuram 438 · corpus 3228

Pasuram 438

Study resources at Uveda
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து * மற்று ஓர் தெய்வம்
 பாடி ஆடிப் பணிந்து * பல்படிகால் வழி ஏறிக் கண்டீர் **
 கூடி வானவர் ஏத்த நின்ற * திருக்குருகூர் அதனுள் *
 ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு * அடிமை புகுவதுவே (7)

Pasuram 439 · corpus 3229

Pasuram 439

Study resources at Uveda
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட * மார்க்கண்டேயன் அவனை *
 நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது * நாராயணன் அருளே **
 கொக்கு அலர் தடம் தாழை வேலித் * திருக்குருகூர் அதனுள் *
 மிக்க ஆதிப்பிரான் நிற்க * மற்றைத் தெய்வம் விளம்புதிரே (8)

Pasuram 440 · corpus 3230

Pasuram 440

Study resources at Uveda
விளம்பும் ஆறு சமயமும் * அவை ஆகியும் மற்றும் தன்பால் *
 அளந்து காண்டற்கு அரியன் ஆகிய * ஆதிப்பிரான் அமரும் **
 வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய * திருக்குருகூர் அதனை *
 உளம் கொள் ஞானத்து வைம்மின் * உம்மை உய்யக்கொண்டு போகுறிலே (9)

Pasuram 441 · corpus 3231

Pasuram 441

Study resources at Uveda
உறுவது ஆவது எத் தேவும் * எவ் உலகங்களும் மற்றும் தன்பால் *
 மறு இல் மூர்த்தியோடு ஒத்து * இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே **
 செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு * திருக்குருகூர் அதனுள் *
 குறிய மாண் உரு ஆகிய * நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே (10)

Pasuram 442 · corpus 3232

Pasuram 442

Study resources at Uveda
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் * வண் குருகூர் நகரான் *
 நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் * மாறன் சடகோபன் **
 வேட்கையால் சொன்ன பாடல் * ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார் *
 மீட்சி இன்றி வைகுந்த மாநகர் * மற்றது கையதுவே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.