Corpus pasurams 3211–3221

This page preserves the source-defined decade 4, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 421 · corpus 3211

Pasuram 421

Study resources at Uveda
நண்ணாதார் முறுவலிப்ப * நல் உற்றார் கரைந்து ஏங்க *
 எண் ஆராத் துயர் விளைக்கும் * இவை என்ன உலகு இயற்கை **
 கண்ணாளா கடல் கடைந்தாய் * உன கழற்கே வரும் பரிசு *
 தண்ணாவாது அடியேனைப் * பணி கண்டாய் சாமாறே (1)

Pasuram 422 · corpus 3212

Pasuram 422

Study resources at Uveda
சாம் ஆறும் கெடும் ஆறும் * தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து *
 ஏமாறிக் கிடந்து அலற்றும் * இவை என்ன உலகு இயற்கை **
 ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் * அரவு அணையாய் அம்மானே *
 கூமாறே விரைகண்டாய் * அடியேனைக் குறிக்கொண்டே (2)

Pasuram 423 · corpus 3213

Pasuram 423

Study resources at Uveda
கொண்டாட்டும் குலம் புனைவும் * தமர் உற்றார் விழு நிதியும் *
 வண்டு ஆர் பூங் குழலாளும் * மனை ஒழிய உயிர் மாய்தல் **
 கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! * கடல்வண்ணா அடியேனை *
 பண்டேபோல் கருதாது * உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே (3)

Pasuram 424 · corpus 3214

Pasuram 424

Study resources at Uveda
கொள் என்று கிளர்ந்து எழுந்த * பெரும் செல்வம் நெருப்பு ஆக *
 கொள் என்று தமம் மூடும் * இவை என்ன உலகு இயற்கை **
 வள்ளலே மணிவண்ணா * உன கழற்கே வரும்பரிசு *
 வள்ளல் செய்து அடியேனை * உனது அருளால் வாங்காயே (4)

Pasuram 425 · corpus 3215

Pasuram 425

Study resources at Uveda
வாங்கு நீர் மலர் உலகில் * நிற்பனவும் திரிவனவும் *
 ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப் * பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் **
 ஈங்கு இதன்மேல் வெம் நரகம் * இவை என்ன உலகு இயற்கை *
 வாங்கு எனை நீ மணிவண்ணா * அடியேனை மறுக்கேலே (5)

Pasuram 426 · corpus 3216

Pasuram 426

Study resources at Uveda
மறுக்கி வல் வலைப்படுத்திக் * குமைத்திட்டுக் கொன்று உண்பர் *
 அறப்பொருளை அறிந்து ஓரார் * இவை என்ன உலகு இயற்கை **
 வெறித் துளவ முடியானே * வினையேனை உனக்கு அடிமை
 அறக்கொண்டாய் * இனி என் ஆர் அமுதே * கூயருளாயே (6)

Pasuram 427 · corpus 3217

Pasuram 427

Study resources at Uveda
ஆயே இவ் உலகத்து * நிற்பனவும் திரிவனவும் *
 நீயே மற்று ஒரு பொருளும் * இன்றி நீ நின்றமையால் **
 நோயே மூப்பு பிறப்பு இறப்புப் * பிணியே என்று இவை ஒழிய *
 கூயேகொள் அடியேனைக் * கொடு உலகம் காட்டேலே (7)

Pasuram 428 · corpus 3218

Pasuram 428

Study resources at Uveda
காட்டி நீ கரந்து உமிழும் * நிலம் நீர் தீ விசும்பு கால் *
 ஈட்டி நீ வைத்து அமைத்த * இமையோர் வாழ் தனி முட்டை **
 கோட்டையினில் கழித்து * என்னை உன் கொழும் சோதி உயரத்து *
 கூட்டு அரிய திருவடிக்கள் * எஞ்ஞான்று கூட்டுதியே? (8)

Pasuram 429 · corpus 3219

Pasuram 429

Study resources at Uveda
கூட்டுதி நின் குரை கழல்கள் * இமையோரும் தொழாவகைசெய்து *
 ஆட்டுதி நீ அரவு அணையாய் * அடியேனும் அஃது அறிவன் **
 வேட்கை எல்லாம் விடுத்து * என்னை உன் திருவடியே சுமந்து உழல *
 கூட்டு அரிய திருவடிக்கள் * கூட்டினை நான் கண்டேனே (9)

Pasuram 430 · corpus 3220

Pasuram 430

Study resources at Uveda
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் * ஐங்கருவி
 கண்ட இன்பம் * தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம் **
 ஒண் தொடியாள் திருமகளும் * நீயுமே நிலாநிற்ப *
 கண்ட சதிர் கண்டொழிந்தேன் * அடைந்தேன் உன் திருவடியே (10)

Pasuram 431 · corpus 3221

Pasuram 431

Study resources at Uveda
திருவடியை நாரணனைக் * கேசவனைப் பரஞ்சுடரை *
 திருவடி சேர்வது கருதிச் * செழுங் குருகூர்ச் சடகோபன் **
 திருவடிமேல் உரைத்த தமிழ் * ஆயிரத்துள் இப் பத்தும் *
 திருவடியே அடைவிக்கும் * திருவடி சேர்ந்து ஒன்றுமினே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.