This page preserves the source-defined decade 4, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
பூசும் சாந்து என் நெஞ்சமே *
புனையும் கண்ணி எனதுடைய *
வாசகம் செய் மாலையே *
வான் பட்டு ஆடையும் அஃதே **
தேசம் ஆன அணிகலனும் *
என் கைகூப்புச் செய்கையே *
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த *
எந்தை ஏக மூர்த்திக்கே (2)
ஏக மூர்த்தி இரு மூர்த்தி *
மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி * ஐந்து பூதம் ஆய்
இரண்டு சுடர் ஆய் * அருவு ஆகி **
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற *
நாராயணனே * உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி *
ஆவி அல்லல் மாய்த்ததே (3)
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த *
மாயப் பேய் உயிர்
மாய்த்த * ஆய மாயனே! *
வாமனனே! மாதவா! **
பூத் தண் மாலை கொண்டு *
உன்னைப் போதால் வணங்கேனேலும் * நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப் *
புனையும் கண்ணி எனது உயிரே (4)
கண்ணி எனது உயிர் *
காதல் கனகச் சோதி முடி முதலா *
எண் இல் பல் கலன்களும் *
ஏலும் ஆடையும் அஃதே **
நண்ணி மூவுலகும் *
நவிற்றும் கீர்த்தியும் அஃதே *
கண்ணன் எம் பிரான் எம்மான் *
கால சக்கரத்தானுக்கே (5)
கால சக்கரத்தொடு *
வெண் சங்கம் கை ஏந்தினாய் *
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த *
நாராயணனே! என்று என்று **
ஓலம் இட்டு நான் அழைத்தால் *
ஒன்றும் வாராயாகிலும் *
கோலம் ஆம் என் சென்னிக்கு *
உன் கமலம் அன்ன குரைகழலே (6)
குரை கழல்கள் நீட்டி *
மண் கொண்ட கோல வாமனா *
குரை கழல் கைகூப்புவார்கள் *
கூட நின்ற மாயனே **
விரை கொள் பூவும் நீரும் கொண்டு *
ஏத்தமாட்டேனேலும் * உன்
உரை கொள் சோதித் திரு உருவம் *
என்னது ஆவி மேலதே (7)