This page preserves the source-defined decade 4, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வீற்றிருந்து ஏழ் உலகும் * தனிக்கோல் செல்ல வீவு இல் சீர் *
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை * வெம் மா பிளந்தான் தன்னை **
போற்றி என்றே கைகள் ஆரத் * தொழுது சொல் மாலைகள் *
ஏற்ற நோற்றேற்கு * இனி என்ன குறை எழுமையுமே? (1)
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் * உறை மார்பினன் *
செய்ய கோலத் தடங் கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி * உள்ளப் பெற்றேன் *
வெய்ய நோய்கள் முழுதும் * வியன் ஞாலத்து வீயவே (2)
வீவு இல் இன்பம் மிக * எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் *
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி * மேவப் பெற்றேன் *
வீவு இல் இன்பம் மிக * எல்லை நிகழ்ந்தனன் மேவியே (3)
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை * அமரர் தம்
ஏற்றை * எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை **
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி * நாளும் மகிழ்வு எய்தினேன் *
காற்றின் முன்னம் கடுகி * வினை நோய்கள் கரியவே (5)
கரிய மேனிமிசை * வெளிய நீறு சிறிதே இடும் *
பெரிய கோலத் தடங்கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி * உள்ளப் பெற்றேற்கு *
அரியது உண்டோ எனக்கு * இன்று தொட்டும் இனி என்றுமே (6)
என்றும் ஒன்று ஆகி * ஒத்தாரும் மிக்கார்களும் * தன் தனக்கு
இன்றி நின்றானை * எல்லா உலகும் உடையான் தன்னை **
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் * சொல் மாலைகள் *
நன்று சூட்டும் விதி எய்தினம் * என்ன குறை நமக்கே? (7)