This page preserves the source-defined decade 4, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
தீர்ப்பாரை யாம் இனி * எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்! *
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல் * உற்ற நல் நோய் இது தேறினோம் **
போர்ப்பாகு தான் செய்து * அன்று ஐவரை வெல்வித்த * மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு * இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே? (1)
திசைக்கின்றதே இவள் நோய் * இது மிக்க பெருந் தெய்வம் *
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் * இளந் தெய்வம் அன்று இது **
திசைப்பு இன்றியே * சங்கு சக்கரம் என்று இவள் கேட்க * நீர்
இசைக்கிற்றிராகில் * நன்றே இல் பெறும் இது காண்மினே (2)
இது காண்மின் அன்னைமீர் * இக் கட்டுவிச்சி சொல் கொண்டு * நீர்
எதுவானும் செய்து * அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின் **
மது வார் துழாய் முடி * மாயப் பிரான் கழல் வாழ்த்தினால் *
அதுவே இவள் உற்ற நோய்க்கும் * அரு மருந்து ஆகுமே (3)
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் * மாய வலவை சொல் கொண்டு * நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ் சோறும் * களன் இழைத்து என் பயன்? **
ஒருங்காகவே உலகு ஏழும் * விழுங்கி உமிழ்ந்திட்ட *
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் * இவளைப் பெறுதிரே (4)
தணியும் பொழுது இல்லை * நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர் *
பிணியும் ஒழிகின்றது இல்லை * பெருகும் இது அல்லால் **
மணியின் அணி நிற மாயன் * தமர் அடி நீறு கொண்டு *
அணிய முயலின் * மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே (6)
வேதம் வல்லார்களைக் கொண்டு * விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து * இவள் நோய் இது * தீர்த்துக் கொள்ளாது போய் **
ஏதம் பறைந்து அல்ல செய்து * கள் ஊடு கலாய்த் தூய் *
கீதம் முழவு இட்டு * நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே (8)
கீழ்மையினால் அங்கு ஓர் * கீழ்மகன் இட்ட முழவின் கீழ் *
நாழ்மை பல சொல்லி * நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் **
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் * இந் நோய்க்கும் ஈதே மருந்து *
ஊழ்மையில் கண்ண பிரான் * கழல் வாழ்த்துமின் உன்னித்தே (9)
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு * ஆட்செய்து நோய் தீர்ந்த *
வழுவாத தொல் புகழ் * வண் குருகூர்ச் சடகோபன் ** சொல்
வழுவாத ஆயிரத்துள் * இவை பத்து வெறிகளும் *
தொழுது ஆடிப் பாட வல்லார் * துக்க சீலம் இலர்களே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.