Corpus pasurams 3200–3210

This page preserves the source-defined decade 4, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 410 · corpus 3200

Pasuram 410

Study resources at Uveda
ஏறு ஆளும் இறையோனும் * திசைமுகனும் திருமகளும் *
 கூறு ஆளும் தனி உடம்பன் * குலம் குலமா அசுரர்களை **
 நீறு ஆகும்படியாக * நிருமித்துப் படை தொட்ட *
 மாறாளன் கவராத * மணி மாமை குறைவு இலமே (1)

Pasuram 411 · corpus 3201

Pasuram 411

Study resources at Uveda
மணி மாமை குறைவு இல்லா * மலர்மாதர் உறை மார்பன் *
 அணி மானத் தட வரைத்தோள் * அடல் ஆழித் தடக்கையன் **
 பணி மானம் பிழையாமே * அடியேனைப் பணிகொண்ட *
 மணிமாயன் கவராத * மட நெஞ்சால் குறைவு இலமே (2)

Pasuram 412 · corpus 3202

Pasuram 412

Study resources at Uveda
மட நெஞ்சால் குறைவு இல்லா * மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி *
 விட நஞ்ச முலை சுவைத்த * மிகு ஞானச் சிறு குழவி **
 பட நாகத்து அணைக் கிடந்த * பரு வரைத் தோள் பரம் புருடன் *
 நெடுமாயன் கவராத * நிறையினால் குறைவு இலமே (3)

Pasuram 413 · corpus 3203

Pasuram 413

Study resources at Uveda
நிறையினால் குறைவு இல்லா * நெடும் பணைத் தோள் மடப் பின்னை *
 பொறையினால் முலை அணைவான் * பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த **
 கறையினார் துவர் உடுக்கை * கடை ஆவின் கழி கோல் கை *
 சறையினார் கவராத * தளிர் நிறத்தால் குறைவு இலமே (4)

Pasuram 414 · corpus 3204

Pasuram 414

Study resources at Uveda
தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் * தனிச் சிறையில் விளப்பு உற்ற *
 கிளிமொழியாள் காரணமாக் * கிளர் அரக்கன் நகர் எரித்த **
 களி மலர்த் துழாய் அலங்கல் * கமழ் முடியன் கடல் ஞாலத்து *
 அளிமிக்கான் கவராத * அறிவினால் குறைவு இலமே (5)

Pasuram 415 · corpus 3205

Pasuram 415

Study resources at Uveda
அறிவினால் குறைவு இல்லா * அகல் ஞாலத்து அவர் அறிய *
 நெறி எல்லாம் எடுத்து உரைத்த * நிறை ஞானத்து ஒருமூர்த்தி **
 குறிய மாண் உரு ஆகிக் * கொடுங் கோளால் நிலம் கொண்ட *
 கிறி அம்மான் கவராத * கிளர் ஒளியால் குறைவு இலமே (6)

Pasuram 416 · corpus 3206

Pasuram 416

Study resources at Uveda
கிளர் ஒளியால் குறைவு இல்லா * அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து *
 கிளர் ஒளிய இரணியனது * அகல் மார்பம் கிழித்து உகந்த **
 வளர் ஒளிய கனல் ஆழி * வலம்புரியன் மணி நீல *
 வளர் ஒளியான் கவராத * வரி வளையால் குறைவு இலமே (7)

Pasuram 417 · corpus 3207

Pasuram 417

Study resources at Uveda
வரி வளையால் குறைவு இல்லாப் * பெரு முழக்கால் அடங்காரை *
 எரி அழலம் புக ஊதி * இரு நிலம் முன் துயர் தவிர்த்த **
 தெரிவு அரிய சிவன் பிரமன் * அமரர் கோன் பணிந்து ஏத்தும் *
 விரி புகழான் கவராத * மேகலையால் குறைவு இலமே (8)

Pasuram 418 · corpus 3208

Pasuram 418

Study resources at Uveda
மேகலையால் குறைவு இல்லா * மெலிவு உற்ற அகல் அல்குல் *
 போகமகள் புகழ்த் தந்தை * விறல் வாணன் புயம் துணித்து **
 நாகமிசைத் துயில்வான் போல் * உலகு எல்லாம் நன்கு ஒடுங்க *
 யோகு அணைவான் கவராத * உடம்பினால் குறைவு இலமே (9)

Pasuram 419 · corpus 3209

Pasuram 419

Study resources at Uveda
உடம்பினால் குறைவு இல்லா * உயிர் பிரிந்த மலைத்துண்டம் *
 கிடந்தனபோல் துணி பலவா * அசுரர் குழாம் துணித்து உகந்த **
 தடம் புனல சடைமுடியன் * தனி ஒருகூறு அமர்ந்து உறையும் *
 உடம்பு உடையான் கவராத * உயிரினால் குறைவு இலமே (10)

Pasuram 420 · corpus 3210

Pasuram 420

Study resources at Uveda
உயிரினால் குறைவு இல்லா * உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி *
 தயிர் வெண்ணெய் உண்டானைத் * தடம் குருகூர்ச் சடகோபன் **
 செயிர் இல் சொல் இசைமாலை * ஆயிரத்துள் இப் பத்தால் *
 வயிரம் சேர் பிறப்பு அறுத்து * வைகுந்தம் நண்ணுவரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.